139 முறையில் செய்தார். நாளடைவில் ஜனங்கள் அவரை மறந்து, அவருடைய அந்தரங்க சுத்தி, தன்னல மறுப்பு, சத்திய வேட்கை - எல்லாவற்றையும் கவனித்தார்கள். அவர் மீது மதிப்பு வளர்ந்து கொண்டே வந்தது. முக்கிய தலைவர்களில் ஒருவரானார். தக்க சமயம் வந்தபோது போராட்டத்தை - புது வகையான ஒரு போராட்டத்தை துணிவுடன் துவக்கினார். அப்புறம்...? சரித்திரப் பிரசித்தமான, உலகமே கண்டறியாத வெற்றியை அவர் கண்டார். 'அடிப்பேன்' என்றான் எதிரி. 'பொறுத்துக் கொள்வேன்' என்றார் அண்ணல் காந்தியடிகள். 'சுடுவேன்' என்றான் பகைவன். சாகிறேன்' என்றார் மகாத்மா. 'வாட்டி உன்னைச் சிறையில் போட்டு முடக்குவேன்' என்று பயமுறுத்தினான் கொடுங்கோலன். 'அஞ்சவில்லை' என்றார் அஹிம்ஸா மூர்த்தி. போர்க்களங்களிலே பல வெற்றிகளைக் கண்ட ஒர் ஏகாதிபத்தியம், உலகத்தில் இதுவரை தோன்றியிராத அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாபெரும் ஏகாதிபத்தியம், இத்தகைய எதிரியை இதற்குமுன் காணாததால், எடுத்த ஆயுதங்களை அப்படியே கீழே போட்டுவிட்டு யோசித்தது. பீரங்கிகளையும் டாங்குகளையும் விட, அந்த மோகனப் புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது அதற்கு! வெற்றி! - மகாத்மாவுக்கு மகத்தான வெற்றி! - ஆ. அது என்ன சாமானியமானதா? ஜூலியஸ் nஸர், அலெக்ஸாந்தர், ஜெங்கிஸ்கான் முதலிய உலக மகா வீரர்கள் கண்ட வெற்றிகளுக்கெல்லாம் பெரிய வெற்றி அது உலகத்துக்கே ஒரு புதுமையான வெற்றி அது இவ்விதமாகச் சத்தியாக்கிரகம் என்னும் ஒப்புயர்வற்ற ஓர் ஆயுதத்தால், நமக்கு - சுதந்திர தாகத்தால் ஏங்கிக் கொண்டிருந்த நமக்கு - நூதனமான முறையில் அவர் விடுதலை தேடிக் கொடுத்தார். அரசியலில் முதல் முதலாகச் சத்தியத்தையும் தர்மத்தையும் புகுத்தி, அதைத் தூய்மைப்படுத்தினார். 'போக்கிரிக்குப் புகலிடம் அரசியல்'
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/141
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை