140 என்ற கூற்றைப் பொய்யாக்கி, யோக்கியர்களுக்கும் அரசியலில் இடம் உண்டு என்பதை நிரூபித்தார் மிருகபலம், ஆத்மீக சக்திக்கு முன் நிற்க முடியாது என்பதை உலகத்துக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டினார். காந்திஜி ஒரு மகா புருஷர் - அல்ல, யுக புருஷர்! - இன்று பெருமை யென்னும் அரங்கத்திலே குதித்துவிட்டு, நாளை இருட்டிலே மறைந்தோடிப் போகும் ஆயிரக் கணக்கான அரசியல் வாதிகளைப் போன்றவரல்லர் அவர். கவிஞர் எட்வின் ஆர்னால்ட் புத்த பகவானைப் பற்றிக் கூறுவதுபோல, மனித ஜாதி என்னும் பெருமரத்தி லிருந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் மணமிக்க ஓர் அபூர்வ மலர் அவர் மரணத்தை வென்ற வீரர்களில் மாபெரும் வீரர் அவர்! - ஆகஸ்ட், 1954 2. பாரதியார் புதிதாய்க் கண்ணாடி போட்ட அந்தப் படத்தைக் கொண்டு வந்து, எல்லோருக்கும் தெரியும் படியான ஓரிடத்தில் மாட்டியிருந்தேன். வெளியே போயிருந்த பாட்டி திடீரென்று என் அறைக்குள்ளே நுழைந்தாள் படத்தைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தபிறகு, 'யாரப்பா, இது? பைத்தியம்மாதிரி இருக்கே! இதைக் கொண்டுவந்து இங்கே மாட்டியிருக்கிறாயே?' என்றாள் அவள், முன் யோசனையே இல்லாமல் நான் முதலில் திடுக்கிட்டேன்; அப்புறம் சிரித்தேன் - இன்று தமிழ்நாடெங்கும் போற்றிப் புகழும் ஓர் அருங்கவியை அவள் ‘பைத்தியம்' என்று சொல்லி விட்டாள்! பாவம், பாரதியாரின் மேதை அவளுக்கு என்ன தெரியும்? ஆனால் தப்பு: இந்தப் பாட்டியின் நிலைமையில்தானே இருந்தது அந்தக் காலத்துத் தமிழகம்? பாரதியார் உயிரோடிருந்தபோது அவரைப் பைத்திய மாய்த்தானே பலரும் நினைத்தார்கள்? யார் தன்னிச்சையாக வாழ விரும்புகிறார்களோ, அவர்களுக்குப் ‘பைத்தியம்' என்ற பட்டத்தை உலகம் சூட்டுகிறது. பாரதியார் இதற்கு எப்படி விதி விலக்காக முடியும்?
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை