142 தமிழ்நாடு செய்த தவப்பயனாக 1882-ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பூரீ சின்னசாமி ஐயர் அவர்களின் புதல்வராய்த் தோன்றிய பூரீ சி. சுப்ரமண்ய பாரதியார் இவர்தாம்; கணக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக மகனைத் தந்தை அழைத்த போது, கணக்கு பிணக்கு 'மணக்கு' ஆமணக்கு என்று சொற்களை அடுக்கிக் கொண்டே சென்ற பாரதியார் இவர்தாம்; ஆறுமாத வாடகை பாக்கியைக் கேட்க வந்த வீட்டுக்காரச் செட்டியாரிடம், 'என்ன அவசரம், செட்டியாரே? இன்னும் பத்து வருஷங் கழித்துச் சுயராஜ்யம் வரப்போகிறது. அந்தச் சர்க்கார் பொக்கிஷத்துக்கு ஒரு 'செக் கொடுக்கிறேன், வாங்கிக் கொள்ளுமே!' என்று சொல்லிவிட்டுக் கலகல வென்று சிரித்த பாரதியார் இவர்தாம்; ஒரு ஹரிஜனச் சிறுவனுக்குப் பூணுல் மாட்டி மந்திரோபதேசம் செய்த பிறகு, 'கனகலிங்கம், நீ இன்றிருந்து பிராமணன்-எதற்கும் அஞ்சாதே! யாரைக் கண்டும் பயப்படாதே! யார் உனக்குப் பூணுால் போட்டு வைத்தது?" என்று எந்தப் பிராமணனாவது உன்னைக் கேட்டால், 'பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டிப் பதில் சொல்' என்று கர்ஜித்த பாரதியார் இவர்தாம்; தெருவில் போயக் கொண்டிருந்தபோது மஹா குருபியான ஒரு கிழவி கொடுத்த சுண்டலையும் அன்புடன் இருகையால் ஏற்று, 'அமிர்தம்! அமிர்தம்' என்று சாப்பிட்ட பாரதி இவர்தாம்! முப்பத்தொன்பதே ஆண்டுகள்தான் இவர் உலகில் வாழ்ந்தார். இந்தக் குறைந்த காலத்திற்குள் கவியாகவும், தேசபக்தராகவும், பத்திராதிபராகவும் சீர்திருத்த வாதியாகவும் இவர் நம் நாட்டுக்கு அருந் தொண்டாற்றினார். ஆனால், இன்று கவி என்ற முறையிலேயே இவரை உலகம் அறிகிறது - அது நியாயமானதே; பொருத்தமானதே. பாரதியார் கவி; சிறந்த தமிழ்க் கவி; பல நூற்றாண்டுகளுக்குப் பின் தமிழில் தோன்றிய ஒர் உண்மைக் கவி - அது மாத்திரமல்ல; தமிழை அழிவினின்று காத்து அதற்குப் புத்துயிர் கொடுத்தவர். அந்தக் காலம் - இவர் வாழ்ந்த காலம் - பண்டிதர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். அப்போது புரியாத, கடினமான நடையில் எழுதுவதுதான் தமிழ் என்று நினைக்கும்படி இருந்தது: 'மக்களுக்கும் தமிழுக்கும் தொடர்பே அற்றுப் போய் விடுமோ!' என்று அஞ்ச வேண்டியிருந்தது. இந்த நிலைமையிலே, பாரதியார் தோன்றினார்: எளிய நடையிலே கவிகள் பல இயற்றினார்; எல்லோருக்கும் புரியும்படியாகக் கட்டுரைகள் பல எழுதினார்; தமிழைப் பண்டிதர்களிடமிருந்து பிடுங்கி மக்களிடம் கொடுத்தவர் அவருடைய தொண்டின் சிறப்பை அக்காலத்தவர் சரியாக அறிந்து கொள்ள வில்லை ஆனால் பாரதியார் அதற்காக
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை