பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 'தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தவப் புதல்வர்' என்ற அடை மொழியை, யாருக்கெல்லாமோ சூட்டுவது நம் வழக்கம். அந்த அடைமொழிக்கேற்றவர் ஒருவர் வெகு காலத்துக்குப் பின் தமிழகத்தில் தோன்றியிருந்தாரென்றால், அவர் பூரீ சுப்பிரமண்ய பாரதியாராகவே இருக்க முடியும். இவ்வாறு நான் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் ராமு என் அறைக்குள் நுழைந்தான்; படத்தைப் பார்த்தான்; உடனே, 'அப்பா, அப்பா இது ஏது?' என்று கேட்டான். 'வாங்கினேன்!” என்றேன் நான். 'நல்லாயிருக்கு, அப்பா!' என்றான் அவன். 'இவர் யார்? உனக்குத் தெரியுமா?' என்று கேட்டேன் நான். அவன் சந்தோஷத்துடன், 'பாரதியார்தானே, அப்பா? பாப்பாப் பாட்டு பாடியிருக்காரே - அவர்தானே, அப்பா?' என்றான் அவன். ஐந்து வயதுகூட இன்னும் நிரம்பவில்லை அவனுக்கு. 'பேஷ்' என்று அவனைத் தட்டிக் கொடுத்தேன் நான். 'ரொம்ப நல்லாயிருக்கு அப்பா, அது' என்றான் அவன் தொடர்ந்து. இதிலிருந்து எனக்கொரு நம்பிக்கை பிறந்தது - சென்ற காலம் அவரை உணரவில்லை; ஆனால் நிகழ்காலத்தில் அரும்புகள் கூட அவரை உணரத் தொடங்கிவிட்டன!' என்பதுதான் அது. - செப்டம்பர், 1954 3. லாக்ரட்டீஸ் சப்பை மூக்கு, பெரிய வாய் - அழகுக்கும் அவனுக்கும் கொஞ்சங்கூடத் தொடர்பே கிடையாது. ஒரே ஒரு கோட்டு, மழை காலமாகட்டும் வெய்யில் காலமாகட்டும், அதையே அணிந்து கொண்டு, வெறுங்கால்களுடன் வீதி வெளியெல்லாம் சுற்றித் திரிந்தான். பேச்சு, பேச்சு, பேச்சுத்தான் சாகும்வரை பேச்சுத்தான்! அவனைப் பிடிக்காதவனொருவன் இவனைப் பற்றிக் கூறுவதாவது: