13 கடைசியாக ஒருநாள் குமாஸ்தா குப்புலிங்கத்தை இதற்கென்றே பேட்டி கண்டு விசாரித்தோம். 'நீங்கள் ஒன்று - அவர் ஈ ஒட்டியிருப்பார்; அதைப் பிரமாதப்படுத்துகிறீர்களே?' என்று அந்த மனுஷன் முகத்தில் அடித்தாற் போல் அலட்சியமாகச் சொல்லிவிட்டான். அப்படிப்பட்டவன், அன்றிரவு நான் வேலையிலிருந்து திரும்பும்போது என்னைத் தானாகவே கூப்பிட்டான். 'என்ன குப்புலிங்கம், இந்த வருஷமும் ஊர்க் குழந்தைகளுக்குத் தீபாவளிப் பட்டாசு உண்டோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே நான் அவனை நெருங்கினேன். 'நிச்சயம் உண்டு; ஆனால் 'ஊர்க் குழந்தைகள்’ என்று சொன்னிர்களே - அதைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்!' என்று ஒரு வெடி குண்டைத் துக்கி வீசி எறிந்தான் அவன். எனக்குத் துக்கி வாரிப் போட்டது. 'ஏன், என்ன விஷயம்?' என்று பரபரப்புடன் விசாரித்தேன். அந்தச் சமயத்தில், "ஆமாம் போங்கள், இன்னும் எத்தனை வருஷங்கள் தான் 'நம் வீட்டுக் குழந்தைகள் ஊர்க் குழந்தை களாயிருப்பதாம்?' என்று கொஞ்சும் பெண் குரலொன்று என் காதில் விழுந்தது. அதைத் தொடர்ந்து, 'பெரிய மனுஷன் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் சும்மாவா?' என்ற ஆண் குரலொன்றும் கேட்டது. நான் திடுக்கிட்டேன் - கலகல வென்ற சிரிப்பொலி எழுந்தது. ஒன்றும் புரியாமல் குப்புலிங்கத்தைப் பார்த்தேன்; திறந்த ஜன்னல் ஒன்றைச் சுட்டி காட்டிவிட்டு, அவன் பிடித்தான் ஒட்டம். என்ன ஆச்சரியம்! - உள்ளே - ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்கள் ஊர்க்காந்தி' எழுந்தருளியிருந்தார்; மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள் - அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய், வாய்மையையும் தூய்மையையும் வளர்த்துக் கொண்டிருந்தார்! - அக்டோபர் 1954
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை