பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சாப்பிட்ட பிறகும் பேச்சு; அதே பேச்சு! இன்பத்தைப் பற்றியும் துயரத்தைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் சாவைப் பற்றியும் பேச்சு! சுற்றிலுமிருந்தவர்கள் கண்களில் நீர் ததும்பியது, அழுதார்கள். 'கூடாது; கூடாது' என்று சமாதானப்படுத்தினான் ஸாக்ரட்டீஸ்; குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்; அப்புறம் உட்கார்ந்தான் தலையை மூடிக்கொண்டு படுத்தான்; கொஞ்சங் கொஞ்சமாக நினைவை இழந்துகொண்டே வந்தான் - இன்னும் ஒரே வினாடிதான் பாக்கி 'கிரீட்டோ, அஸ்விலியஸுக்கு நான் ஒரு சேவல் கொடுக்க வேண்டும். நீ அதைக் கொடுத்து விடு - மறந்துவிடாதே!' என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளிவந்தன. 'ஆகட்டும்; அப்புறம்?' என்று நீர் வடியும் கண்களுடன் கேட்டான் கிரீட்டோ. பதில் இல்லை - அவ்வளவுதான் லாக்ரட்டீஸ் மரணத்தை வென்ற மகா புருஷனாகிவிட்டான். - அக்டோபர், 1954