151 பிள்ளை அம்மையைப் பெற்றது கிடையாது. ஆயினும், அம்மையின் வாழ்வைப் பெற்று வளர்வது பிள்ளை என்பது தவறல்ல. இத் தாயைப் போலவே கடவுளைப் படைத்த மனிதன்' அவரைத் தன்னைப் படைத்தவ'ராகப் பாராட்டுகிறான். 令 ● 途 *్మ4 *్మ * மனிதனின் இனப்பண்பு திடுமெனப் பிறந்து வளர்ந்து விடவில்லை. அது போலவே, கடவுட் கருத்தும் ஒரே மூச்சில் பிறந்து முழு உருவம் அடைந்து விடவில்லை. அது இனப் பண்புடன் பிறந்து, இனப் பண்புடன் வளர்ந்தது. குகையிலும் மரப் பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் இன்று வீடும் குடியும், நாடும் நகரும், ஆட்சியும் அரசியலும் வகுத்துக் கொண்டு முன்னேறுகிறான். குகையும் மரப்பொந்தும் இன்று கோட்டை கொத்தளங்களாகவும், அரண்மனை மாடங்களாகவும் மாறியுள்ளன. காட்டு விலங்குகளின் முள்ளடர்ந்த மேடு பள்ளங்கள், இன்று இராச பாட்டைகளாகவும் நகர வீதிகளாகவும், மரச் சோலைகளாகவும், பூங்காக்களாகவும் மாறி விட்டன. தோலுரியும் மரவுரியும் இன்று பாம்புத் தோலை நாண வைக்கும் மென்மையும், வானவில்லைப் பழிக்கும் வண்ணங்களும் உடைய ஆடை அணிமணிகளாகி யுள்ளன. நரியின் ஊளையும் குரங்கின் கூச்சலும், இன்று திட்ப நுட்பமும், அறிவும் இனிமையும் வாய்ந்த நம் செந்தமிழ் போன்ற எண்ணற்ற மொழிகளாகியுள்ளன. மரத்தில் தத்தியேறப் பயன்பட்ட பண்டை மனிதனின் கை கால்கள், இன்று இம்மெனப்படு முன் இரு நூறும் முந்நூறும் சென்று, நிலத்திலும் கடலிலும் வானிலும் விரையும் ஊர்திகள், கப்பல்கள், வானூர்திகளைப் படைத்துள்ளன. இவ்வெல்லாப் படைப்புகளிலும் மனிதன் சென்ற வழியையே, இவ்வெல்லாப் படைப்புகளிலும் அவன் அடைந்த வேகமான முன்னேற்றத்தையே அவனது கடவுட் கருத்திலும் காண்கிறோம். 岑 多 海 *్య• •్మ• •్మe பண்டை மனிதனின் குகை எங்கே? இன்றைய மனிதனின் கோட்டை கொத்தள அரண்மனைகள் எங்கே? அன்றைய குரங்குக் கூச்சல்கள் எங்கே? இன்றைய அறிவார்ந்த மொழிகள், இலக்கியங்கள், கவிதைகள், நாடகங்கள் எங்கே? பழைய நாலு கால், இரண்டு கால் நடை எங்கே? புதிய வானூர்தி, நீர் மூழ்கிக் கப்பல்கள் எங்கே? சக்கி முக்கிக்கல் எங்கே? மின்சாரம், வானொலி, தந்தி, ரேடியம், அணுகுண்டு ஆகியவை எங்கே?
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை