பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 முற்கால மனிதனின் கடவுட் கருத்துக்களுக்கும் இக்கால மனிதனின் கடவுட் கருத்துக்களுக்கும் இடையே, நாம் இதே வகையான வேற்றுமையைக் காண்கிறோம். குகையில் வாழ்ந்த மனிதனின் கடவுட் கருத்து, குகையை ஒத்தது. இன்றைய மனிதன் கடவுட்கருத்து, கூடகோபுரமாளிகையை ஒத்தது. பழங்காலக் கடவுளர் சக்கி முக்கிக்கற்கள் போன்றவர்கள் இன்றைய நாகரிக மனிதனுடைய கடவுளர் மின்சாரம், வானொலி, ரேடியம், அணுசக்தி போன்றவர்கள். முதற் கடவுட் கருத்துக்கள் நாலு கால், இரண்டு கால் நடை போட்டன. பின் அவை கட்டை வண்டி, வில் வண்டி, பெட்டி வண்டி, மோட்டார் வண்டி, புகை வண்டி முதலிய படிகளைத் தாண்டி இன்று அறிவுக் கடலில் விரைகின்றன; உணர்ச்சி ஆழத்தில் உலவுகின்றன: கற்பனை வானில் கடுகிப் பறக்கின்றன. + * உயிரனங்களிடையே மனிதனுக்கு மட்டுமே சிந்தனை ஆற்றல் (Perception) உண்டு. விலங்கினங்களுக்குக் காட்சியாற்றல் மட்டுமே உண்டு. காட்சியாற்றலாகவும் (Observation) காட்சி HLIISILLTHpøom & Guld (COmparison Contrast) GU GrffshSS. SS பகுத்தறியும் ஆற்றல் (Analysis) வகுத்தறியும் ஆற்றல் (Clasification) @5m (555,5utb offspá (Synthetic Conception) ośualsogy on இணைந்து சிந்தனை ஆற்றல் (Analytic Thought) கருத்தாற்றல் (Syn thetic Thought) sibljanasium.jpg) (Creative Thought) sou%jg). - பிப்ரவரி 1955 2 சென்ற பகுதியில் குறிப்பிட்டபடி, விரிந்து பரந்த மனிதனின் கற்பனையாற்றல் அவனுடைய பேரவாவையும் அவா ஆர்வங்களை யும் (Aspirations) தூண்டின மனித வாழ்வில் இயல்பாயுள்ள சிறுமையையும் குறுமையையும் இவை முதலில் மறைக்க உதவின; பின் பெருக்கி வளர்க்கவும் படிப்படியாக நிறைவு படுத்தவும் உதவின. தன் சிறுமையைப் பெருமை நோக்கி வளர்க்க அவன் நாடிய கருத்தே கடவுள் ஆகும். அது அவன் குறிக்கோளாயிருந்து செயற்கோளை வளர்த்தது. இது எப்படி? பால் மணம் மாறாத ஒரு சின்னஞ் சிறு குழந்தை ஒரு கட்டையைத் தொட்டிலிலிட்டு அழகாக ஆட்டுகிறது