பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 என்னம்மா, அது?' என்று கேட்கிறாள் தாய், அன்புப் புன்முறுவலோடு 'அது என் குழந்தை, அம்மா ஒயாது அழுகிறது; பால் கொடுத்துத் துங்க வைக்கிறேன்!' என்கிறது குழந்தை அம்மாவின் தாலாட்டுப் பாட்டைப் போல அதுவும் ஒரு வகையான பாட்டைத் தனக்கு வகுத்துக் கொண்டு தாலாட்டுகிறது. அடுத்த நாள் அது மரக்கட்டைக் குழந்தைக்குக் கந்தல் துணிகள் கொண்டு ஒரு சட்டை தைக்கிறது அன்று மாலையே இன்னொரு கட்டையிலும் துணியைச் சுற்றிப் பழய கட்டையுடன் மணையில் வைத்து ஏதேதோ செய்கிறது. சிரிப்புத் தாங்காது பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், 'குழந்தைக்குக் கண்ணாலம்'மா' என்று அது கூறுகிறது. அடுத்த கணம் தன் பொம்மைப் பெண்ணையும் மருமகனையும் மறந்து விட்டு, அது மறுபடியும் குழந்தையாகி, தாயிடம் பால் குடிக்க ஒடுகிறது. “என்னம்மா, மகளும் மருமகனும் ஆன பிறகு கூடப் பால் குடிக்க வருகிறாய்?' என்று கேலி செய்கிறாள் தாய்!.... தாயாக, மாமியாராக வளர வேண்டும் என்ற அவா ஆர்வம் குழந்தையைத் தூண்டி, இன்னொரு குழந்தையைப் படைத்து வளர்க்கும்படி செய்தது. குழந்தையின் இந்த வாழ்க்கை யார்வம் போன்றதே மனித இனத்தின் இயற்கை யார்வம், உயிரார்வம், இன ஆர்வம், அதுவே அவன் குழந்தைப் பருவத்திலுள்ள நிறைவாழ் வார்வம், கடவுட் கருத்தார்வம்! மனிதனின் குறைபாடுகள் அத்தனையையும் இக்கடவுட் கருத்து நிறைவேற்றிற்று. கருத்தளவாக முதலில், செயலளவாக நாளடைவில் நிறைவு படுத்திற்று, நிறைவு படுத்துகின்றது. ஆனால் மனிதன் அறிவு வளருந்தோறும் அவன் தன் குறைபாடுகளை இன்னும் மிகுதியாக உணர்கிறான் குறைபாடுகளை அறியுந்தோறும், அவன் நிறைவார்வ மாகிய கடவுட் கருத்தும் வளர்ந்தும் கொண்டே வந்தது, வருகிறது.

  • *్మ

மனிதனைச் சிறுமைப் படுத்திப் பேசும் அறிஞரும் உண்டு, பெருமைப்படுத்திப் பேசும் அறிஞரும் உண்டு. இரு சாராரும்