154 அவனைப் பற்றிய இரு பேருண்மைகளையே கண்டு கூறுகின்றனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் இருவேறு கோணத்திலிருந்து அவனைப் பார்க்கின்றனர். மனிதன் சிறுமை அவன் சூழல், அவன் பிறப்புக்கு உரியது. அவன் பெருமை அவன் வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு, வளர்ச்சிப் போக்குக்கு உரியது. சிறுமையின் எல்லையை நாம் அவனுடைய உடலில், உடலாற்ற லில், உடல் சார்ந்த வாழ்வில் காணலாம். பெருமையின் எல்லையை அவனது செயலில், அறிவில் கற்பனையில் - இம் மூன்றும் கடந்த கடவுட் கருத்தில் காணலாம். மனிதன் உடல் இயற்கைப் பொருள்களால் ஆனது. இவ்வியற்கைப் பொருள்கள் இயற்கையின் உயிரிலாப் பொருள்களிலிருந்து வேறுபட்டவையல்ல. அதுமட்டுமன்று. இயற்கையின் உயிரிலாப் பொருள்களிடையே பொன் உண்டு; வைரம், மாணிக்கம், மரகதம் உண்டு. இயலொளி தரும் ஒளிமம் (ரேடியம்) உண்டு. மனிதன் உடலின் பொருள்கள் இவற்றுக்கு ஒப்பானவை என்று யாரும் கூற முடியாது. மேலும் பொன்னும் மணியும் கெடமாட்டா, கல்லும் மணலும் கூடக் கெடுவதில்லை. நேர்மாறாக, மனிதன் உடல் கெடுவது, அழிவது. பிணி, மூப்பு சாக்காடு உடையது. அழுக்கும் பீழையும் சார்ந்தது. இவை யாவுமே மனிதன் உடல் சார்ந்த சிறுமையைக் காட்டுகின்றன. உடற் சார்பிலுங் கூட முத்துச் சிப்பி தன் உடலிலிருந்து முத்தை ஈனுகிறது. பசு தன் உடலிலிருந்து கோரோசனையை அளிக்கிறது. கஸ்தூரி மான் தன் உடலிலிருந்து கஸ்தூரியைத் தருகிறது இவற்றுக்கு ஈடாக மனிதன் உடல் மூலம் தருவது எதுவுமில்லை. மனிதனின் உடலும் உயிரினங்களின் உடலும் இங்ங்னம் இயற்கைப் பொருள்களினாலேயே ஆக்கப்பட்டவை; சிறுமையுடையவை ஆயினும் இயற்கைப் பொருள்களுக்கு இல்லாத உயிராற்றல் உயிர்ப்பொருள்களுக்கு உண்டு அவ்வுயிராற்றல் உடலை உள்ளிருந்து வளர்க்கிறது. ஒவ்வொரு கணமும் அது உடலின் பழைய பண்பு கெடுத்துப் புதுப் பண்பு ஊட்டி, அதற்குப் புத்துருவும் புது வாழ்வும், புது வளமும் வளர்ச்சியும் தருகிறது. மேலும் உடலில் வளர்ச்சி குன்றி, தளர்ச்சியும் கேடும் அதைச் சூழ்வதற்குள், உயிராற்றல் அதனுள்ளிருந்து இன்னொரு புதுய உடலை, அல்லது இன்னும் சில
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/156
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை