தமிழச்சி ஜெயகாந்தன் தேவலோகத்தில் சபை கூடியிருக்கிறது. தேவர்களும் அமர நிலை எய்திய மானிடர்களும் அங்கே குழுமி இருக்கின்றனர். தேவேந்திரன் கொலு வீற்றிருக்கிறான். சபையில் சிறு சலசலப்பு..... நாரதனும் இளங்கோவும் வருகிறார்கள். இளங்கோவடிகளாரின் முகம். சிவந்து விழிகளில் கொதிநீர் துளிர்க்கிறது. நாரதனின் முகத்தில் கேலிச் சிரிப்பு: கலகத்திற்கு வித்துன்றிய எக்களிப்பு-சபையினரை நோக்கிச் சிரிக்கிறான். இளங்கோவால் யாரையும் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை; தலை குனிந்து நாரதனின் பின்னே வருகிறார். அவமானமும் துயரமும் மனதில் திமிறிப் பாய்கின்றன. நீண்ட பெருமூச்சு அவர் இதயத்தைச் சாந்தப்படுத்த முயற்சிக்கிறது. 'வருக! திரிலோக சஞ்சாரியே, வருக! அடிகளார் ஏன் வாட்டமுற்றிருக்கிறார்?' என்று வினவுகிறான் தேவேந்திரன். நான் திரிலோக சஞ்சாரியாக இருப்பது அடிகளாருக்குப் பிடிக்கவில்லை!' என்கிறான் நாரதன். இளங்கோ பொறுமை இழந்து அவனை விறைத்து நோக்குகிறார். 'உங்களுக்குள் என்ன சச்சரவு?' என்கிறான் இந்திரன். இளங்கோ பற்களை 'நெறு நெறு வெனக் கடிக்கிறார். கோபத்தால் அவர் நெற்றி நரம்பு புடைத்து நெளிகிறது-பேச முடியவில்லை. “என்ன நடந்தது?’ என்று திடுக்கிட்டு வினவுகிறான் இந்திரன். ‘'தேவேந்திரா! சிலம்பொலி சிலம்பிய தாயகத்தை, கண்ணகி உலவிய புண்ணிய பூமியை, தமிழ் நடந்த எந்தை நாட்டை இத் தருக்கன் இகழ்ந்து பேசுகிறான்!”
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/16
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை