160 வந்தது.பாபநாசத்திற்கும் ஆட்களை அனுப்பித் தேடுவித்தார்கள். தேடி வந்தவர்கள் டி.கே.சி.யின் சொல்லருவியிலே, துளைந்து துளைந்து இன்புற்றுப் பரவச நிலையிலிருக்கும் தங்கள் உறவினர்களைக் கண்டார்கள். தாங்களும் உடனிருந்து சொல் விருந்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள். மணி 5 ஆயிற்று. ஒருவாறாக முதலியாரவர்களது சொல்லருவி நின்றது; தேடி வந்தவர்கள் தாம் வரநேரிட்ட காரணத்தைச் கூறினார்கள். சிற்றுண்டியானதும் அனைவரும் பிரியாவிடை பெற்றுப் பிரிந்தனர். இவ்வகை அனுபவத்தைப் பெற்றவர்கள் ஆண்களும் பெண்களும் நூற்றுக் கணக்காக உள்ளார்கள். இவ்வாறாக, பசி முதலிய உபாதைகளைப் பொருட் படுத்தாது, சலிப்புச் சிறிதுமின்றி, உத்ஸாகத்துடன் இன்ப லகரியில் கேட்போர் திளைத்தாடும்படி செய்ய வல்லவர் டி.கே.சி. முதலியார். இப்படிச் செய்வதென்றால், எத்தனை காலமாக அவர் கம்பன் கவிதையிலாழ்ந்து அனுபவித்திருக்க வேண்டும்! டி கே.சி. அவர்கள் திருச்சியில் எப். ஏ. யில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே தமிழிலக்கியங்களில் ஈடுபட்டவர்கள். பின்னர், சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் பி. ஏ.யில் வாசித்துக் கொண்டிருக்கும்போது இந்த அனுபவம் முதிர்ச்சியடைந்தது. அவர்கள் உயிர் நூல் மாணவர்-அந்த சாஸ்திரத்தைக் கூட ஒரு கலையாகவே அவர்கள் கற்று வந்தனர். இக்காலத்தில் செல்வ பூரீமான் பாண்டித்துரைத் தேவரவர்கள் தலைமையில், தாம் ஆண்டெர்ஸன் ஹாலில் ஆற்றிய சொற்பொழிவைக் குறித்து டி.கே.சி. அடிக்கடிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன் அவர்களது உருவப்படம் அந்த ஹாலில் சில தினங்களுக்குமுன் வைக்கப்பட்டது. இக்காரணத்தாற்போலும்! இதன் பின்னர், சட்டப் பரீட்சைக்குச் சென்னையிலும் திருவனந்தை யிலும் கல்வி கற்று, ஆங்கில இலக்கியங்களையும் நன்கு பயின்று, அறிவு வளம் பெற்ற போது, தமிழிலக்கிய அனுபவம் கனிந்து இன்பரஸ்ம் துளும்பியது சட்டப் பtகூைடியில் தேறிய பின், அவரை மலேரியா ஜூரம் பீடித்துக்கொண்டது அதற்குரிய சிகிச்சை பெறுவதிலேயே அவரது கட்டிளமைப் பருவத்தில் பெரும் பகுதி கழிந்துவிட்டது. ஆனால், இதுவும் ஒரு வகையில் அனுகூலமாயிருந்தது. வக்கீல் தொழிலில் முயற்சி செய்து காலத்தை வீண் போக்காது, தமிழ்க் கவிதையைக் கற்றுப் பாடி அனுபவித்து அதனையே தமது பொழுதுபோக்காகக் கொள்ள நேரிட்டது. எந்த இடத்தில் கவிதையின் உயிர்நாடி பேசுகிறது? உயிர்நாடியின் ஒலி முற்றும் கேட்பதற்கு எந்த இடத்தில்,
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/162
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை