161 எப்படி, அழுத்தங் கொடுத்துப் பாடவேண்டும்? கவிதையின் தன்மை தான் என்ன? தமிழ்க் கவிதைக்குரிய தனிப் பண்புதான் யாது? அதன் பொருட்சுவை நன்றாக விளங்குவதற்கு என்னென்ன பக்குவங்கள் செய்யவேண்டும்? இவைபோன்ற கேள்விகளுக்கெல்லாம் உண்மை முடிவை முற்ற ஆராய்ந்து தெரிந்து பிறர்க்கு விளக்கஞ் செய்து வந்தார்கள். தம்மிடம் வரும் நண்பர்களிடத்தில் தாம் கொண்ட முடி வின்படி செய்யுட் பொருளையும் அழகையும் அனுபவித்து விளக்கி, அந்நண்பர்களையும் கவிதானுபவத்தில் திளைக்கச் செய்து வந்தனர். இவ்வகை விளக்கங்களில் டி.கே.சி. கையாண்ட தமிழைக் குறித்துச் சில கூறவேண்டும். கவிதையின் உயிர்த் தத்துவத்தைக் கண்டு கொண்டது போலவே, தமிழ் மொழியின் உயிர்த் தத்துவத்தையும் அவர்கள் கண்டுகொண்டார்கள். சரமாரியாய்ச் சொற்களைப் பொழிந்து வியப்புக் கடல் அமைத்து, அதில் மக்களை விழவைப்பதில் இன்பம் இருக்குமா? ஒரு கணநேர உத்ஸ்ாகம்தான் விளையுமேயன்றி, வேறு நிலைத்த பயன் யாதேனும் உண்டாகுமா? எதுகை மோனைகளை அமைத்து அலங்காரமாகப் பேசும் லளிதப்பேச்சு உள்ளுணர்ச்சியைத் தொடுதல்கூட இயலுமா? இலக்கண நெறியைக் கடைப்பிடித்து வாக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒழுங்காக முறைப்பட வைத்துப் பேசும் இலக்கணப் பேச்சு சிறிதேனும் இன்பமும் வலிமையும் உடையதாகுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னேயே மடிந்துபோன பழஞ்சொற் களை அடுக்கிப் பேசும் உயரிய நடைப்பேச்சு பிரேத ஊர்வலம்போல் இருக்குமேயன்றி, உயிர்த் தத்துவம் என்பது சிறிதேனும் கொண்ட தாகுமா? இவற்றையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து இவை கொள்ளத் தக்கவையல்ல என்று முடிவு கண்டார்கள். வழக்கொழிந்த சொற்களை நீக்கிவிடுதல் வேண்டும் என்பதை வற்புறுத்த, அவர்கள் ஒரு மாணவ - கூட்டத்தில் பேசியது ஞாபகம் வருகிறது 'மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையரவர்கள் நமக்கு ஒரு பேருபகாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பதிப்பித்த நூல் ஒவ்வொன்றிலும் அரும்பத அகராதி யொன்று சேர்த்திருக்கிறார்கள். இதனால் நாம் வழங்காது நீக்கவேண்டும் சொற்களை யெல்லாம் ஒரே இடத்திற் பார்த்து நமது வசன நடையைத் திருத்திக் கொள்ளலா மல்லவா? இது எத்தனை பேருபகாரம் இதற்காக ஐயரவர்களுக்குத் தமிழ் நாடெங்கும் கோயில்கள் அமைத்து இவர்களைப் பூசிக்கலாமே! என்றார்கள். இவ்வாறு பேசிய கூட்டத்தில் ஐயரவர்களும் இருந்தார்கள் என்று என் நினைவு. டி.கே.சி. சிலகாலம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பாட நியமன சபையில் அங்கத்தினராயிருந்தார்கள். அதன் ம-இ-11
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/163
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை