162 கூட்டமொன்றில், இறையனார் களவியலுரையைப் பாடமாக வைக்கும் கேள்வி வந்தது. அபபொழுது சபைத்தலைவர் நூல் முழுவதையும் பாடமாக வைக்கலாம் என்றார். முதலியார், அது என்னத்திற்கு? ஒன்றரைப் பக்கம் வைத்தால் போதாதா? மாணவர்கள் இதன்படி எழுதலாகாது என்று தெரிவதற்குத்தானே இதைப் பாடமாக வைப்பது' என்றார்கள் சாதாரணப் பேச்சு வழக்குத் தமிழுக்குள்ள உயிர்த் தத்துவம் வேறு எவ்வகையான தமிழ் நடைக்கும் கிடையாது என்ற அரிய உண்மையைத் தமிழுலகத்தில் டி.கே.சி.தான் முதன் முதலில் கண்டு பிடித்துப் பிரசாரம் செய்தவர்கள். அவர்கள்தான் அதை நடைமுறையில் அனுஷ்டானத்தில் கொண்டு வந்தவர்கள். அவரது கருத்து பாதியுண்மைதானென்பதை எளிதில் அறியலாம், என்றாலும், இவ்வுண்மையைச் சிறிதும் உணராத கற்றறி மோழைகளைக் கண்டு, தமிழின் வருங்கால நிலையை எண்ணி வருந்தி, முழுவுண்மை என்று கொண்டாலும் குற்றமில்லை என்று துணிந்து பேச்சு, எழுத்து என்ற இரண்டு வகையிலும், எல்லாத் துறைகளிலும், சாதாரணப் பேச்சுத் தமிழே வேண்டுமென்று வற்புறுத்தி வந்தார்கள். சுமார் 1923-வரை பெரும்பாலும் தனிப் பாடல்களையே டி.கே.சி. தன் கவிதை விளக்கத்திற்கு ஏற்றவைகளாகக் கொண்டிருந்தார்கள். தம்மிடம் வரும் நண்பர்களை உரைகல்லாகக் கொண்டு, கவிதையின் தராதரத்தை மதிப்பிட்டு வந்தார்கள். காரென்று பேர்படைத்தாய் ககனத்துறும் போது என்பது முதலிய செய்யுட்களின் கவிதை நயத்தை அவர்கள் வாயிலாகக் கேட்டு அனுபவித்தவர்கள்.அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. அக்காலத்தில் அவர்கள் திருநெல்வேலி - வண்ணார் பேட்டையில் வசித்து வந்தார்கள். 'கம்பர்கழக மொன்று வண்ணார் பேட்டையின் சமீபத்துள்ள வீரராகபுரத்தில, நிறுவப்பட்டது. அக்கழகத்திற்கு டி.கே.சி. அடிக்கடி வந்து கம்பன் பாடல்களின் நயங்களைக் குறித்து வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள் பல அன்பர்களும் உளம் நெகிழ்ந்து கேட்டு மகிழ்ந்து வந்தார்கள் கம்பனது பாடற் பெருமைகளை மக்கள் உள்ளபடி உணரலானார்கள். இக்கழகச் சார்பில் 'கம்பன் விழா ஒன்று நடைபெற்றது. அதில் தலைமை தாங்கியவர் பூரீ ரா ராகவையங்கார் அவர்கள். நெல்லைத் தமிழ் மக்களெல்லாம் பேராதரவு காட்டி விழாப்பணியை மேற்கொண்ட அன்பர்களுக்குப் பேருக்கம் உண்டாகும்படி செய்தனர். விழா மிகச் சிறப்பாக, பெருங் கோலாகலத்துடன் நடைபெற்றது. இவ்வெற்றிகரமான விழாவினால் டி.கே.சி.யின் உற்சாகம் கரைபுரண்டு பெருகிற்று பின்னர், தமது வீட்டிலேயே வாரத்திற்கு ஒருமுறை நண்பர்கள் கூடும்படி ஏற்பாடு
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/164
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை