164 தியாகராய நகரிலும் அவர்கள் குடியிருந்தார்கள். இக்காலத்தில்தான் ராஜாஜி முதலியோரது நட்பு வாய்த்தது: கவிமணியின் நட்புத் தொடங்கியதும் இங்கேதான். தமது உத்தியோக முறையில் பல ஊர்களிலும் உள்ள கோயில்கள் முதலியவற்றைப் பார்வையிட்டு, வேண்டும் சீர்திருத்தங்களைச் செய்து வந்தனர். கோயில்களிற்கண்ட தமிழ் நாட்டுச் சிற்பக் கலையும் நடனக் கலையும் டி.கே.சி.க்குப் பேரின்பம் விளைத்தன. இவ்விரு கலைகளும் கம்பன் கவிதையில் இவர்களுக்குள்ள ஈடுபாட்டையும் அனுபவத்தையும் எத்தனையோ மடங்கு பெருக்கி விட்டன. கவிதைக் கலையின் அம்சங்களிற் பல இப்பொழுது நூதன முறையில் அவருக்குப் புலப்படலாயின. கவிதையின் பாவத்திலும் தாளத்திலும் எப்பொழுதும் முக்கிய கவனம் செலுத்திவந்த முதலியார், பூரீமதி பாலசரஸ்வதி முதலிய முதல்தர நாட்டிய ராணிகளின் நடனச் சுவையை நுகர்ந்ததும் அமுதம் உண்ட அமரர்கள் போலப் புத்துயிர் பெற்று மாறிவிட்டனர். தன்னை மறந்த இன்பப் போதையில், குறள் வெண்பாக்களும் 11/3 அடியோடு நடனத்திலிருந்தே தோன்றி நடஞ் செய்கின்றன என்று பிரசாரஞ் செய்தனர். நடனத்தையும் நன்குணர்ந்து இசையிலும் வல்லவரான பூரீமதி ஆர். வி. சாஸ்திரியம்மையாரின் நட்பு இசைக் கலையிலும் முதலியாரவர்களுக்கு அபிருசியும் பயிற்சியும் அளித்தது. கம்பன் கவிதைகளிற் பலவற்றைக் கீர்த்தனை ரூபத்தில் ராக, பாவ, தாளத்தோடு பாடிக் கேட்பதில் மிகுந்த பிரீதி ஏற்பட்டது. தோள் கண்டார் தோளே கண்டார் என்று வரும் பாடலைக் கீர்த்தனை ரூபத்தில் இவர்கள் அனுபவித்தது போல், யாரும் அனுபவித்திருக்க முடியாது. கீர்த்தனங்களையும் பதங்களையும் அவற்றின் பொருள் தெரியாமல் அனுபவிக்க முடியுமா? முடியாது. இந்தக் கருத்தை டி.கே.சி. பல இடங்களிலும் வெளியிட்டுப் பிரசாரம் செய்து வந்தனர். பிரசாரம் அதி கப்பட அதிகப்பட, இதற்கு எதிர்ப்பும் உருவெடுக்கத் தொடங்கிற்று, ஆகவே, நியாயமான தடை யாதும் இருக்க முடியாத இக்கொள்கையை அரண்செய்து வலியுறுத்த வேண்டியது அவசியமாயிற்று. காலஞ்சென்ற ராஜா ஸர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும் ஸர். ஆர். கே. சண்முகம் செட்டியாரவர்களும் இம் முயற்சியில் தீவிரமாக ஈடு பட்டனர். தமிழிசை இயக்கம் தமிழ் நாடெங்கும் பரவிற்று. தமிழிசை மகாநாடு தேவகோட்டையில் 1941-ல் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கியவர் டி.கே சி. அவர்களே. இக்காலமுதல் பத்மவிபூஷன் பூரீமதி சுப்புலக்ஷ்மி முதலியோர் டி.கே சி. யின் நட்பில் பெரும்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை