166 ஐயர் விடாப்பிடிக்காரர், ஒயாது தூண்டிவந்தனர். 1931ல் தோன்றிய 'கலைமகள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் டி.கே.சியும் தம்மைச் சேர்த்துக்கொள்ள அனுமதியளித்தனர். அது முதல் அவர்களது பத்திரிகை வாழ்வு பெருகி வந்தது. ஆனந்த விகடனில் எழுதினர். 1941ல் தோன்றிய கல்கி'யில் 'கம்பர் தரும் காட்சி' என்ற பெயரால் மாதந்தோறும் எழுதி வந்தனர். ஸ்ர். ஆர். கே. சண்முகம் செட்டியார் தொடங்கிய 'வசந்தம்' என்ற மாதப் பத்திரிகைக்கு டி.கே.சி. தான் ஆசிரியராயமைந்தார். அகில இந்திய ரேடியோவும் இவர்களது ஒலிப்பேச்சு மூலமாய்ப் புகழ்பெற்று. இவர்கள் மேலும் மேலும் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. இவ்வாறு வெளிவந்தனவற்றில் ஒரு சில கட்டுரைகளைத் தொகுத்து 'இதய ஒலி என்ற பெயரால் பிரசுரஞ் செய்தனர் இவர்கள் எழுதியவற்றுளெல்லாம் இதுவே தலைசிறந்து விளங்குகிறது. இது மிக மிக அருமையான நூல்: கவிதை பற்றிய உண்மைகளைத் தமிழ் மக்களது உள்ளத்தில் தெள்ளத் தெளிய உணர்த்தி ஒலித்துக் கொண்டிருக்கும் பேச்சு நூல் எழுதுவது பற்றி டி.கே.சி. கொண்டிருந்த கொள்கை சிறிது மாற்ற வேண்டியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 'கம்பன் யார்' என்பதும் இவ்வகைத் தொகுப்பு நூலே, கட்டுரைகளே யன்றி, தமது அருமையான அழகிய விளக்கத்துடன் அழகிய கவிதை நூல்களைப் பதிப்பிட வேண்டுமென்ற கருத்தும் இவர்களது மனத்தில் ஊடாடியது. இதன் பயனாக 'முத்தொள்ளாயிரம்' கம்பர் தரும் இராமாயணம்' என்ற இரண்டு பதிப்புக்களும் வெளிவந் துள்ளன. இவற்றிற் காணும் உரை நயமும் முன்னுரை முதலி யனவும் தனிச்சிறப்புடையன. இவர் பதிப்பித்த இராமாயணத் தில் முதலிரண்டு காண்டங்களும் ஏற்கெனவே தமிழுலகில் இடம் பெற்றுவிட்டன. இன்னும் மூன்று காண்டங்கள் விரைவில் வெளி வரும் என்று தெரிகிறது. இவை 1951 அக்டோபர் 31-ல் திருக் குற்றாலத்தில் அரங்கேறின. அரங்கேற்று விழாவில் தலைமை தாங்கியவர் ராஜாஜி அவர்கள். தமிழ் பண்டிதர்கள், தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், மடாதிபதிகளின் பிரதிநிதிகள் முதலிய பலரும் விஜயஞ் செய்து, தங்கள் பாராட்டுரைகளால் இல் விழாவைக் கெளரவஞ்செய்தனர். 16-12-1954-ல் தமிழ்நாடு முழுதும் துக்கக்கடலில் ஆழ்ந்து முழுக, டி.கே சி அவர்கள் நம்மிடை நின்று மறைந்து விட்டார்கள்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை