15 உணர்ச்சிக் கொந்தளிப்பால், அவர் உடல் நடுங்குகிறது. நான் கண்ட உண்மையைக் கூறினேன் - மனிதர்களின் நியதிப்படி உண்மை புகல்வது குற்றமாக இருக்கலாம்; ஆனால் தேவ நியதிப்படி குற்றமாகாதே' என்கிறான் நாரதன். ‘'தேவனைவிட மேம்பட்டவன் மனிதன்; அதிலும் தமிழன்! - நாரதன்பொய் உரைக்கிறான்; அவன் நாவை அறுக்க வேண்டும்!” என்கிறார் இளங்கோ. 'சபையோர்களே, நான் பொய்யுரைக்கவேண்டிய அவசிய மில்லை. ஆதலால் நான் சொல்வதனைத்தும் சத்தியம் என்று முதலில் கூறிக்கொள்கிறேன். திரிலோக சஞ்சாரத்திற்குச் சென்ற போது பூலோகத்துக்கும் வழக்கம்போல் சென்றேன். அங்கு 'பதியெழு வறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்’ கண்டேன். ஆனால் அடிகளார் உரைப்பதுபோல் 'கோலின் செம்மை கண்டிலேன்; 'குடையின் தண்மை கண்டிலேன். பஞ்சமும் நோயும், கொலையும் களவும், வஞ்சமும் பொய்மை யும் கண்டேன், தேவா!-அடிகளார் போற்றும் தமிழ் நிலத்தில் ஆண்மையுமில்லை; பெண்மையுமில்லை. கற்புமில்லை; காதலு மில்லை, நேர்மையும் இல்லை; நீதியும் இல்லை. விபசாரம் மலிந்து கிடக்கிறது. புனிதமிழந்து, பொற்பிழந்து, மானமிழந்து, மதியிழந்து, வீரம் இழந்து வெறும் கோழைகளாகத் திரிகின்றனர் தமிழர். அவர்கள் மனிதர்கள்கூட அல்லர்: மிருக ஜீவிதம் திரும்பி இருக்கிறது தமிழ் நிலத்தில்! அந்நாட்டில் கண்ணகி பிறந்ததாக என்னால் கனவுக்கூடக் காணமுடியவில்லை. தாசியென்றோர் தனி வகுப்பில்லை தமிழ் நாட்டில்!-ஆம், அப்படியெல்லாம் தமிழர்களைப் பகுத்துணர முடியாது. பேடியர் - கோழையர் இவரெல்லாம் அங்கு வீரர்கள். நல்லவர்கள் வாழ முடியாத நாடு அது! அங்கே சென்றேன் சீரழிந்து கிடக்கும் தமிழகத்தைக் கண்டேன்! என் இதயம் புண்பட்டது. இளங்கோவடிகளாரிடம் என் புண்பட்ட மனநிலையை உரைத்தேன். தமிழர்களின் தறிகெட்ட வாழ்வைச் சோகக் குரலில் கூறினேன் அடிகளார் அவற்றை ஆட்சேபிக்கிறார்; என் மேல் சீற்றம் கொள்கிறார். அறிந்த உண்மையை மறைக்க என் உள்ளம் உடன்படவில்லை - இதிலென்ன குற்றம்? குற்றமிருப்பின் கூறுங்கள், சபையோர் களே!-தண்டனை பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்!” என்று சண்டப் பிரசண்டம் புரிகிறான் நாரதன்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை