பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமரிசனம் தமிழ் ஒளி 1. 'வளரும் தமிழுக்கு இதுவரை ஓரளவு தொண்டு செய்து வந்த ஸ்டார் பிரசுரத்தார். இப்பொழுது 'தேயும் தமிழுக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் - அதற்காக அவர்கள் வெளியிட்டிருக்கும் முதல் நூலின் பெயர் 'புதுமைப் பித்தன் கவிதைகள்' 'புதுமைப் பித்தன் 'கவிதை'கள் கூடவா எழுதினார்?' என்று ஆச்சரியம் அடைகிறீர்களா? ஆம், அவர் எழுதியது கவிதைதான் என்பதைக் கண்டு பிடித்'திருக்கிறார் ஒருவர். கண்டு பிடித்ததோடு நின்றாரா, இல்லை. அவர் கண்டு பிடித்த அந்தக் கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிட்டு விட்டார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்: ‘புதுமைப் பித்தன் பரம்பரை' என்ற போர்டைக் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு, தமிழ் நாட்டையே அதிரடித்து வரும் அன்பர் ரகுநாதன்தான் அவர்! புதுமைப் பித்தன் எழுதியுள்ள பத்தொன்பது கவிதை' களை அரும்பாடு பட்டுத் தொகுத்த பெருமை அவரையே சாரும். அவரை வெறும் தொகுப்பாளராக மட்டும் நினைப்பது, அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவர் ஒரு, வியாகரண ஆசிரியரும் ஆவார் என்பதை இந்நூலின் முன்னுரை உங்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளக்கும். புதுமைப் பித்தன் எழுதிய பத்தொன்பது துணுக்கு களுக்கு - அதாவது 'அறுபது பக்கத் துணுக்கு களுக்கு. அவர் முப்பத்திரண்டு பக்கம் முன்னுரை எழுதியிருக்கிறார் என்றால், அவருடைய திறமையைப் பற்றி உங்களுக்கு அதிகமாக ஐயம் ஏற்படாதென்றே கருதுகிறேன்.