173 உரை கெட்டுத் தடுமாறும் பத்தொன்பது துணுக்குகளுக்கு உரை கொடுத்தும், உருவற்றுக் கிடக்கும் அருவங்களுக்கு நாமகரணம் செய்தும் வைக்கப்பட்ட தலைப்புகளுடைய ஒரு நூலில், 'எனக்கும் பாதி பங்கு கொடு' என்று கேட்கும் முன்னுரை முப்பத்திரண்டு பக்கங்களுக்கு நீண்டு கிடக்கிறதென்றால், 'தோன்றா தோன்றித் துறைபல முடிக்கும் ஒருவரின் 'கைச் சரக்கு'க்கு அது அடையாள மாகாமல் வேறெப்படி இருக்கும்? எனவே, ஒருமுறை இந்தச் சரக்கைப் பரிசீலித்துப் பார்ப்பது நல்லது இதற்கு முன் இந்தச் சரக்கைப் புகழ்ந்துள்ள சிலர், வாங்கி ஏமாறுவதற்குரிய வாய்ப்பைத் தேடித் தந்துள்ளனர். அவர்களைப் பற்றி நமக்குத் தெரிவதெல்லாம் டமில்' என்ற ஒரு பாஷை இருப்பதாக அவர்களுக்கும் தெரியும் என்பதே! இத்தகைய பேர்வழிகளுக்குத் தற்காலம் கைத் தடியாக உபயோகப்படுவது ஆங்கிலம். குருடர்களுக்குக் கைத்தடி வழி காட்டுகிறது. தட்டத்தட்ட 'ரிதும்' கண்டு பிடிக்கிறார்கள்! எனினும் 1954 டிசம்பரில் பிரசுரிக்கப் பட்ட சுதந்திரா என்ற ஆங்கிலப் பத்திரிகை இந் நூலுக்குக் கீழ்க்கண்டவாறு விமரிசனம் எழுதிற்று: 'இந்தப் புத்தகத்தில் உள்ள அறுபது பக்கக் கவிதைகளுக்கு முன்னால், விஷய ஞானம் நிறைந்ததுபோல் 'பாவலா’ப் பண்ணுகிற முன்னுரை ஒன்று இருக்கிறது. முற்றிலும் அனாவசியமான குறிப்புகள் வேறு பின்னால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை தொகுப்பாசிரி யரின் தற்சிறப்பு மோகத்தை உயர்த்துவதற்குத்தான் பயன் படும்!" இது தொகுப்பாசிரியரைப் பற்றிய உண்மையை ஓரளவுக்குப் பிரதிபலித்தாலும், கிரந்தத்தைப்பற்றிய உண்மை நிலையைப் புலப்படுத்தாமல் கிரந்த கர்த்தாவின் புகழுக்குக் குனிந்து கொடுக் கிறது! கவிதை என்றால் என்ன?" என்று கேட்டவாறு தொகுப்பா சிரியர் தமது முன்னுரையைத் தொடங்குகிறார்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை