பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அவரைக் கொஞ்சம் தடுத்து நிறுத்தி, 'தமிழ்க் கவிதை என்றால் என்ன?' என்று கேட்கும்படியும், கேட்டுப் பதிலிறுக்கும்படியும் செய்வது நல்லது. ஆம், 'தமிழ்க் கவிதை என்றால் என்ன? '-இதைக் கொஞ்சம் விஸ்தாரமாகவே பார்க்கலாம்: தமிழ் இலக்கியம் பிறக்கும்பொழுதே இசை வடிவம் பெற்றுப் பிறந்தது. அதாவது, பாட்டாகப் பிறந்தது. சங்க இலக்கியங்களும் தொகை நூற்களும், பரணிகளும் உலாக்களும் எல்லாம் பாட்டுக்களே! அவை வாழும் நிலத்திற் கேற்பவும் வழங்கும் பொருளுக் கேற்பவும் வடிவம் பெற்றவை. சங்க காலம் என்கிற சிறு குன்றிலே பிறந்த, பெரு வெள்ளம்போல் பொங்கிப் பிரவகித்த தமிழ்ச்செய்யுள், அகண்ட காவிரிபோல் இலக்கியக் கடலில் கலப்பது கண் கொள்ளாக் காட்சி! அவற்றைப் பார்க்கும் போது, 'ஒல்கி ஒசிந்து சலசலவென்று கிளர்ந்த இச் சிற்றோடையா இவ்வளவு பெரிய ஆகிருதியுடன் மதவேழம் புறப்பட்டதுபோல் நடை போட்டு வருகிறது!’ என்று நாம் பிரமிக்கிறோம். 'எட்டுத் திக்குகளையும் தொட்டுத் தழுவக் கை நீட்டும் மகா நதிபோல, இதன் சொரூபம் இப்படி வியாபித்து விம்முகிறதே!' என்று நாம் திகைக்கிறோம். குறள் வடிவாகப் பிறந்த விஷ்ணு, பகிரண்டங்களை அளந்தது புராணக் கதை. ஆம், தமிழ்க் கவிதையும் ரொம்பக் குள்ளமாகத்தான் பிறந்தது. ஆனால், அது மேருமலைச் சிகரங்களில் இடித்துக்கொண்டு வளர்ந்து மேலே தலை நிமிர்ந்து நின்றது. பிறகு, தன் உருவத்தைக் குற'ளாக்கிக் காட்டி, அந்தக் குறளடிகளால் அது அகிலத்தையே அளந்தது. பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத் துக்களின்மேல் தனித்தனியே ஏறுவதால், இருநூற்றுப் பதினாறு உயிர் மெய் யெழுத்துக்கள் பிறக்கின்றன என்ற இலக்கணத்தை மட்டும் பார்த்தால், தமிழ் மொழி வெறும் எழுத்துகளாகத்தான் தெரியும்