175 இதுகூட ஆங்கில மோஸ்தர் தமிழர்கள் சிலருக்குத் தெரியாது; “டமில்' என்று மட்டுமே தெரியும். இன்னும் சில, டமிலர்'களோ, 'இந்த டமிலுக்கு, இவ்வளவு லெட்டர்ஸ்-டு மச்!' என்று அனுதாபப்படுவார்கள்! 'தமிழ் நெடுங் கணக்கிலுள்ள எழுத்துக்களைத் தவிர, தமிழுக்கு வேறு அந்தஸ்து கிடையாது!' என்று நினைக்கும் ஆத்மாக்களும் தமிழ் நாட்டில் உண்டு. ஆனால், பூரீமான் ரகுநாதன் அப்படி நினைக்க மாட்டார் என்று நாம் நம்புவதற்கு இடமிருக்கிறது. எனினும், அவர் புதுமைப் பித்தனைக் கவிஞராக்கவும், அதன் மூலம் தம்மையும் ஒரு கவிராயர் என்று காட்டிக் கொள்ளவும் முனையும்பொழுது தான் தமிழுக்குக் குடமுடைக்கும் வேலை"யை அவர் துணிந்து செய்திருக் கிறார் என்று நாம் சொல்கிறோம். 'புதுமைப் பித்தன், சிறு கதைக்கு எப்படிப் புதுப் புது உருவ அமைப்புகளை உண்டாக்கித் தந்தாரோ, அதுபோலவே அவர் தாம் எழுதிய கவிதைக்கும் புதிய உருவ அமைதியை உண்டாக்கித் தந்திருக்கிறார்!’ அவர் கூறும் உருவ அமைதி எப்படி யிருக்கிறது என்றால், பேய்க்குக் கால் பார்த்த கதையாக இருக்கிறது. அதாவது, தடம் புரிந்து கொள்ள முடியாமல் பூரீமான் ரகுநாதன் அவர்கள் கற்பனைக்கு மட்டுமே புலப்படக் கூடியதாக இருக்கிறது! மேலும் அவருடைய கண்டு பிடிப்பைப் பார்ப்போம்: 'வட்டமுலை மின்னார் வசமிழந்த காமத்தால் நீலமணி மாடத்து நெடியதொரு சாளரத்தை தொட்டுத் தடவிவந்து தோயும் நிலாப்பிழம்பை எட்டி எடுத்து இடைசுற்றிச் சேலையென ஒல்கி நடப்பதாய் உவமை சொல..... . இந்தப் பகுதியில் 'வட்டமுலை மின்னார்' என்று தொடங்கும் அடியின் எதுகைக்கு மறு எதுகை ஐந்தாவது வரியில்தான் வருகிறது.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை