பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 எப்படி? வெண்பாவின் வகைகளில் ஒன்று பஃறொடை வெண்பா. இது பல தொடைகள் வரத் தொடுப்பது. பாரதியாருடைய் குயிலும், பாரதிதாசனுடைய சஞ்சீவி பர்வதத்தின் சாரலும் இந்தப் பஃறொடை வெண்பாக்களால் இயற்றப்பட்டவை. வெண்பாவிற்குரிய தளையே பஃறொடை வெண்பாவிற்கும் உரியது. தேமா-அல்லது புளிமா-என்கிற சீர்கள் முதற் சீர்களானால், வருஞ்சீர்கள் நிரையசைச் சீர்களாக இருக்க வேண்டும். இவ்வாறே முதற் சீர்கள் நிரையசைச் சீர்களாக இருக்குமானால், வருஞ்சீர்கள் நேரசைச் சீர்களாக இருக்க வேண்டும். 'மாமுன் நிரையும் நின்ரமுன் நேரும் என்றார் ஆகலின் இவ்வாறே காய்ச்சீர் இயற்சீர்கள் நிற்க, வருஞ்சீர் காய்ச்சீர் இயற்சீர் பெறுதல் வேண்டும். இது சீர் தோறும் அடிதோறும் அமைதல் வேண்டும். a. ஒவ்வொரு பாவிற்கும் விதித்தத் தளைகளை மீறக் கூடாதென்பது குருட்டு விதியல்ல. அந்த இயற்கையை மீறும்போதுதான் தளை தப்பித் தாள லயம் கெடுகிறது. தாள லயம் என்றால் என்ன? 'உருவ அமைதி 'யினின்றும் எழுவதே தாளம்: உருவ அமைதி சிதைந்தால் தாளம் சிதையும்-தாளம் சிதைந்தால்? 'தாளம், தாளம், தாளம்..... தாளத்திற் கோர் தடை யுண்டாயின் கூளம், கூளம், கூளம்....!" என்றார் பாரதியாரும் - ஆம், கூளத்திலிருந்து எந்த லயமும் பிறப்பதில்லை. எனவே பாவம், லயம்' என்கிற வார்த்தைகளை வைத்து ஏய்க்க முடியாது! - செப்டம்பர் 1955 12 - يسuo