16 இளங்கோவடிகளார் அழுகிறார். தேவேந்திரா, இது வீண் அவதூறு! இதை நான் நம்ப முடியாது. மானமும் வீரமும் உயிரெனக் கொண்டோர் தமிழர்! அப்படிப்பட்ட தமிழர்கள் பேடியராம், கோழையராம்! வீரர்களின் குருதியிலே தமிழ் நிலத்தின் சரிதை வரையப் பட்டிருக்கிறது. செல்வம் கொழிக்கும் தமிழகத்தில் பஞ்சம், நோய்-என்னால் நம்ப முடியவில்லை. தேவா! கண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் கற்புடைய மாதர் இல்லையெனக் கதைக்கிறான் இவன் - அறம் வளர்ந்த தமிழ் நிலத்தில் வள்ளுவரின் குறள் வாழும் தமிழ் நாட்டில் கொலையாம். களவாம், விபசாரமாம்! இந்த அவ மானத்தை, பொய்யுரையை என்னால் பொறுக்க முடியாது. காவிரி பாய்ந்தோடும் தமிழ் நாட்டில், தென்றல் பிறக்கும் தென் பொதிகையில், நற்றமிழ் வளர்த்த நான்மாடக் கூடலில் நான் மீண்டும் பிறப்பேனா?-அப்படி ஒரு பாக்கியம் கிட்டுவோர் தேவரிலும் மேலோர்!-நாரதன் தமிழர்மீது பொறாமை கொண்டு வீணாகப் புரளி கிளப்புகிறான். தன் தவறை உணர்ந்து அவன் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் அவன் நாவை அறுப்பேன்!' என்று ரெளத்ராகாரமாக மொழிகிறார் இளங்கோவடிகள். சபையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் எழுகிறது: ‘'தேவேந்திரா! என் கணவனை அநீதியாகக் கொலை புரிந்த அன்றே - மதுரை நகரை-அநீதியை எரித்து விட்டேன். ஆம், அன்றோடு பொய்மை ஒழிந்தது; அநீதி அழிந்தது. அன்று நான் மூட்டிய கற்புத் தீ என்றும், தமிழ் மகள் ஒருத்தி உள்ளளவும் கனன்று கொண்டிருக்கும் - இதுதான் உண்மை; நாரதன் புகல்வது பொய். என்னுடைய கற்பையே அவன் அவமதிக்கிறான்; அவனைத் தண்டித்தே ஆக வேண்டும்.' தேவேந்திரனுக்கு என்ன நீதி வழங்குவது என்று புரியவில்லை -குழம்பினான்! 'ஏன், வேண்டுமானால் கண்ணகி தேவியாரும், அடிகளாரும் தங்கள் லட்சிய பூமியை நேரில் கண்டு தரிசித்து வரலாமே! அப்பொழுது அவர்களுக்கே புரியும்-நான் சொல்வது பொய்யா, மெய்யா என்பது!’ என்று யோசனை கூறுகிறான் நாரதன். அவன் யோசனையை சபை முழுதும் ஆதரிக்கிறது! o **
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை