179 சிறையிட்டுத் தடுக்கும் தளையாக அல்லாமல், சீர்களைத் திரட்டிப் போருக்கனுப்பும் எக்காளமாக அமைந்துவிட்டது. ஆகவே தான் சீர்களை இணைக்கும் முறைக்குத் தளை' என்ற பெயர் தமிழில் தோன்றுவதாயிற்று. ஒரு பாட்டில், தளை தட்டுகிறது' என்றால், சீர்கள் முறையாக, இயல்பாக, இணையவில்லை என்று அர்த்தம்! எழுதப் பெறுதலின் எழுத் தென்றும், அவ்வெழுத்துக்கள் இசை பெற அசைவுறுதலின் 'அசை என்றும், அசைகள் சேர்ந்து சீர்பெற நிற்றலிற் 'சீர் என்றும் அச்சீர் இரண்டைச் சேர்த்துக் கட்டுதலின் தளை என்றும் அத்தளைகள் இணைந்து நடைபெற நிற்றலின் அடி' என்றும், அவ்வடிகளைப் பொருத்தமுறத் தொடுத்தலின் 'தொடை என்றும், தொடைகள் 'பாவி’ (தாவி) நடத்தலிற் 'பா' வென்றும் இலக்கணம் கூறுகிறது. ஒரு பாவின் இத்தகைய கட்டுக்கோப்பைக் கொண்டு, அதன் தன்மைகளைக் கொண்டு, பாவினம் பிரிக்கப்படுகிறது. எவ்வளவு இயற்கையான யாப்பமைதி: இந்த இயற்கையை மீறும்போது ரூபம் சிதைகிறது. அதனால்தான் யாப்பிலக்கணப் பயிற்சியற்ற ஒருவன், தன்னைக் கவி' என்று தம்பட்டமடித்துக் கொண்டாலும் அவனால் தமிழ்ச்சொற்களைக் கடித்துக் குதறித் துப்பத்தான் முடிகிறது. இன்னும் சிறந்த கற்பனா சக்தியைப் பெற்றுள்ள சிலர், கவிதைக்கு மேல் கவிதையாக எழுதிக் குவித்தும் 'கவிஞன் என்கிற ஸ்தானத்தை எட்டிப் பிடிக்காமல் நம் அனுதாபத்தைப் பெறுவதோடு நிற்பதற்குக் காரணம் என்ன? தமிழின் திட்ப நுட்பங்களை உணருந் திறனின்மையும், யாப்பு முறையை வெறுக்கும் மரபு கெட்ட மலட்டுத்தனமுமே காரணங் களாகும். எனவே, யாப்பிலக்கணப் பயிற்சியும் தேர்ச்சியுமின்றிக் கவிதை எழதப் புகுவது, அரங்கின்றி வட்டாடிய கதைபோல் முடி கின்றது. அந்த நாட்களில் புதிய ரூபம் சமைக்க முயன்றோர் அனை வருக்கும் யாப்பிலக்கணத் தேர்ச்சி மிகுந்திருந்தது என்பது தமிழைக் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியும். அதனால்தான் கவித்வம் என்கிற வெள்ளம் அப்போதெல்லாம் உள்ளுக்குள் மருகிக் கண்ணிர் விடுவதில்லை, பிரவகித்துப் பொங்கும் வெள்ளம்போல்,
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை