பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 எற்றித் தெறிக்கும் அலைபோல், ஜீவ இயக்கம் பெற்றுப் பாயும்: தொடும்; தொட்டு மனசை முழுக்காட்டும்; அதன் சங்கமத்திற் பிறக்கும் லயங்கள் இணைந்து இசைந்து பாடும். மூங்கைத்தனமும் மொழிப் புலமையின்மையும் கவித்வத்தை வேரறுக்கும் களைகள். அந்தக் களைகளை வேலி கட்டிக் காக்க வேண்டாம் என்றுதான் நாம் கூறுகிறோம். 'பஃறொடை வெண்பா என்கிற ரூபத்தைப் பின்பற்றிப் புதுமைப் பித்தன் எழுத முயன்றார். ஆனால் ஏலாத்தனம் மேலிட அதற்குரிய யாப்பைச் சிதைத்தார். அப்படிச் சிதைக்காமல், அரங்கிற்குள் நின்றே வட்டாடும் திறமையை அவர் பெற்றிருக்கவில்லை! தன் கருத்துக்களைத் குறிப்பிட்ட எல்லையில் நின்று சொல்லுந் திறனின்மையால், தேர்ச்சியின்மையால், எல்லையை மீறி, இலக்கணத்தை மீறி - அதாவது, இலக்கணமின்றி யாப்பைச் சிதைத்து எழுதத் தொடங்கினார். இந்த விஷப் பரீட்சை'க்குக் கிராம ஊழியன்' ஆதரவு கொடுக்கப்போய், விபரீத ஆசை வளர ஆரம்பித்தது. புதுமைப் பித்தன் தன்னை யறியாமலேயே அந்த உளைச் சேற்றில் கால் வைத்து விட்டார். எதிர்ப்புக் கிளம்பவே சமாளிக்க முயன்றார்; சமாதானம் கூற முயன்றார், 'வெறும் முயற்சி மட்டுமே!’ என்றார், 'இது வெறும் பிரச்னை' என்று தட்டிக் கழிக்கவும் செய்தார். ஆனால், ஒவ்வொரு பாபச் செயலுக்கும் உலகத்தில் வாரிசு இருப்பதுபோல, இதற்கும் ஒரு வாரிசு இருக்கத்தான் செய்தது. அந்த வாரிசாகத்தான் இன்று ரகுநாதன் தோற்றமளிக்கிறார்! பாவத்தின் வாரிசாகவுள்ள அவர், பாவங்களைப் பற்றிப் பேசுவதில் உள்ள பொருத்தம், வியத்தற்குரியது. புதுமைப் பித்தனுக்குக் கைவராத யாப்புச் சிதைந்துள்ள அதே பஃறொடை வெண்பாவை இங்கே உரிய இலக்கணத்துடன் எழுதிப் பார்ப்போம்: 'வட்டமுலை மின்னார் வசமிழந்த காமத்தால் நீலமணி மாடத்து நீள்கின்ற சாளரத்தைத் தொட்டுத் தடவிவந்து தோயும் நிலாப்பிழம்பை