பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 எட்டி எடுத்தே இடை சுற்றிச் சேலையென ஒல்கி நடக்கும் உவமை சொல...... y 3 புதுமைப் பித்தன் யாப்பில் முன்னர் இற்று விழுந்த சொற்கள். இப்பொழுது மேற்படி பாடலில் இணைந்து தாளம் பெறுவதைப் பாருங்கள். இந்தப் புதிய சக்திக்குக் காரணம் யாது? யாப்புக் கெடாத உருவ அமைதிதான்! எனினும், இது நின்ற நிலவும் கவிதையாகாது. இந்தக் கற்பனைக்கு எது காரணமாக இருந்ததோ, எது இலக்கியமாக இருந்ததோ, அதுதான் மதிப்பைப் பெறும், அந்தக் கற்பனைக்கருவூலமான ஜெயங் கொண்டான் பாடல்தான் கவிதை: 'கலவிக் களியின் மயக்கத்தால் கலைபோய் அகலக் கலைமதியின் நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர் நீள்பொற் கபாடந் திறமினோ!' ஆம், இதுதான் கவிதை இதுதான் இலக்கியம்! இனி, பூரீமான் ரகுநாதன் அவர்களின் வியாகரணத்தை ஆராய்வோம்: 'வட்டமுலை மின்னார்' என்று தொடங்கும் அடியின் எதுகைக்கு மறு எதுகை ஐந்தாவது வரியில்தான் வருகிறது. அதே சமயத்தில் மூன்றாவது வரி, வகரமோனை பெறவில்லை. எனினும், பாட்டின் முதல் ஆறு வரிகளில் அமைந்துள்ள தாளலயம், தாளலயத்தோடு ஒட்டிவரும் பாவலயம், நம்மை இந்த எதுகை மோனைகளையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது!' இவ்வாறு வியாகரணம் வகுக்கிறார் பூரீமான் ரகுநாதன். நமக்குத் தெரிந்தவரை, இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்புதல் என்பது, முன்னோர் வகுத்த மொழி மரபும் நூல் மரபும் கெடாது, இலக்கியப் பாதையைத் தொட்டுத் துலக்கி விவரிப்பதே ஆகும். அதை விட்டுத் தமிழ் மரபையே கொன்று விட்டு வியாகரணம் வகுக்கப் புகுந்த ஆசிரியர் யாரையும் தமிழ் நாட்டிற் காணமுடியாது அத்தகைய வறுமை தமிழ் இலக்கியத்தைப் பீடித்த தில்லை. ஆனால்,