182 துரதிர்ஷ்டவசமாக அந்த வறுமையின் தத்துவ ஆசிரியராகக் கிளம்பியிருக்கும் பூரீமான் ரகுநாதன், தன் தத்துவ வறுமையைக் கொட்டிக் குழப்புகிறார்! கூளமாகிக் கிடக்கும் குப்பையில் தாள லயமும் பாவலயமும் ஏது? அதனால்தான் மேற்கூறிய பாடலில் ஆசிரியர் எதுகை மோனைகளை மறந்துவிட்டார். அவருடன் சேர்ந்து வியாகரண ஆசிரியரும் இது 'பாடல் என்பதையே அடியோடு மறந்து விடுகிறார். இந்த நிலையில் பாடல் என்கிற பிரக்ஞை தப்பி விடும் பொழுது எதுகை மோனைகளை எப்படி மறக்காமல் இருப்பது? 'எட்டி எடுத்து' என்ற சீர்கள் குறுகிய தாள அளவை கொண்டதாகக் கூறுகிறார் பூரீமான் ரகுநாதன். 'குறுகிய தாள அளவை கொண்டவை' என்று கூற இவருக்கு எது அளவுகோல் என்று நமக்குப் புரியவில்லை. ஏனெனில், 'எட்டி எடுத்து' என்கிற இரண்டு சீர்களும் வெண்பா விற்குரிய தளையே யாகும். பஃறொடை வெண்பா என்கிற உருவத் திற்கு, அவை பெறும் தாள அளவையும் அவ்வளவே! ஆனால் மூன்றாவது சீர், 'இடை சுற்றி என்று உயிர் எழுத்துப் பெறுவதால், இரண்டாவது சீராகிய எடுத்து' என்பதிலுள்ள உகரம் கெட்டு, 'எட்டி எடுத் திடை சுற்றி' என்றாகும். அவ்வாறாயின் வஞ்சிச் சீராகிய கனிச் சீர் வந்து தளை கெட்டுத் தாளம் முறியும். எனவே, இரண்டாவது சீரின் ஈற்றசையில் ஏகாரம் இணைந்தால், எடுத்தே' என்றாகித் தளை பொருந்தித் தாள லயம் பெறும். இதை மீறும்பொழுது நமக்குக் கிடைப்பது தாளமல்ல, கூளம்1-ஆம், வெறுங் குப்பை இவற்றைப் புரிந்துகொள்ளும் திராணியைக் கூட இந்தத் தொகுப்பாசிரியர் இழந்து விட்டிருக்கிறார். 'தாள லயம்' என்பது ஒர் உருவ வரம்புக்குட்பட்டதுதான். குறிப்பிட்ட உருவம் என்று வரும்பொழுது அதில் பொருந்தும் சீரும் தளையும் சரியான தாள அளவை கொண்டவையே ஆகும். உருவத்தை வைத்துக் கொண்டுதான் தாள அளவைக் கணக்கிட முடியும் எனவே, குறுகிய தாள அளவை கொண்ட வார்த்தைகள் என்று இவர் எப்படி அளந்தார்? பாட்டிற் காணப்படும் பாவ லயம், 'குறுகிய தாள அளவையைச் சமன் செய்கிறதாம்! - அப்படி யானால், தாளலயம் கெட்டுக் கிடக்கும் எல்லாவரிகளுக்குமே ஒவ்வொரு பாவலயம் வந்தல்லவா சமன் செய்ய வேண்டும்? ஒரு கிழக் குரங்கு இரண்டு பூனைகளுக்கு அப்பம் பங்கிட்ட கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும் அந்தக் குரங்கின் அற்புதத் தராசைச் சமயம் பார்த்து ரகுநாதன் அமுக்கி விட்டார் என்று தெரிகிறது
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/184
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை