183 அதனால்தான் அதே நிறுத்தல் அளவைப் பாடலில் புகுத்தப் பார்க்கிறார்! பூனைகளின் அப்பங்களை நிறுப்பதாகக் கூறி, தானே கடித்துத் தின்ற குரங்குபோல் அதில் குறையும்போது இதிலும், இதில் குறையும் போது அதிலுமாகக் கடிக்கும் இந்தப் புதியஉருவ அமைதி'யின் கடியைத் தாங்கமுடியாமல் சீர் கெட்டுத் தளைகுன்றித் தாளம் பிசகிக் கூளமாகக் கிடக்கின்றன, இந்தக் குப்பைகள்! 'இனி பாவங்களை வெளிப்படுத்துவது எது?' என்று பார்க்கலாம். ரகுநாதன் கூறுவது போன்று, தாளம் கெட்டபோது இடறும் வார்த்தைகளா பாவத்தைத் தோற்றுவிக்கின்றன? - இல்லை: உண்மையில் சந்தங்களே பாவலயத்தைத் தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தவை! இதோ ஒரு பாடல். இது, கலிங்கத்துப் பரணி'யில் ஒரு காட்சி: கலிங்கப்போரை நேரிற் கண்ட ஒரு முது பேய், அதனைக் காளித் தலைவிக்குக் கூறக் கருதி மெல்ல வருகின்றது. காளியிடம் அந்தக் கூளிக்கு அச்சம். எனவே, அதன் நடை தழுதழுத்துத் தயக்கம் தோன்றுகிறது. இதை ஆசிரியர் பாடுகிறார்: 'அழைக்க என்றலும் அழைக்க வந்தணுகி அஞ்சிஅஞ்சி உனதானையில் பிழைக்க வந்தனம் பொறுத்தெமக் கருள்செய் பெண்ணனங் கெனவணங்கவே!' பேய், தயக்கத்துடன் நடந்துவருவது போல, இத்தாழிசையின் சந்தமும் அறுந்தறுந்து நடைபெறுவதை நோக்குக! இதோ மற்றொரு காட்சி: கருணாகரன் புயல்போலப் பாய்ந்து சாடக் கலிங்கர் அஞ்சி அலறுகின்றனர். இந்த 'அச்சச் சுவை மிகுந்து பாடல் பெறும் சந்தம் எப்படியிருக்கிறது. பாருங்கள். ‘'எதுகொல் இது இது மாயை ஒன்று கோல்... எரிகொல். மறலிகொல் ஊழியின் கடை
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/185
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை