184 அதுகொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியோ டேழ் கலிங்கரே!' இதோ, போர் தொடங்குகிறது: 'எடுளடு மெடுமென வெடுத்ததேர் இதலொலி கடலொலி இகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடுவிடு மெனுமொலி மிகக்கவே!!! இதோ, விற்போர் நடைபெறுகிறது: 'தழல்படு கழைவனம் எப்படி அப்படி சடசட தமர மெழப்பக ழிப்படை அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழி தொடுத்துவலிப்பரே!' எல்லாம் நம் கண்முன் நடைபெறுகின்றன. ஆம், பாவலயம் பாட்டில் இழந்து கொஞ்சுகிறது. எனவே, இடமறிந்து சந்தங்களை உபயோகிக்கும்பொழுது பாவலயம் என்பது பாட்டில் குடிகொண்டு விடுகிறது. சிறந்த கவித்துவம் என்பது இதுதான்! ஆகவே, சந்த லயங்களே பாவ லயங்களைத் தோற்றுவிக்கின்றன இன்னும் விளக்கமாகக் கூறினால் குறிப்பிட்ட உருவ வரம்புக்குட்பட்ட தாளமே பாவ லயத்தைத் தோற்றுவிக்கும். யாப்பமைதியின்றி உருவமில்லை; உருவ வரம்பை மீறித் தாளம் அளவு பெறாது. மேலும், எந்தப் பாவிலும் தாள லயம் என்பது அதன் யாப்பைப் பொருத்ததே யாகும். பாடலுக்கும் உரைநடைக்குமுள்ள வேறுபாடே இதுதான் சிறந்த உரைநடை என்பது, உணர்ச்சிகளை எட்டிப் பிடித்துத் தொடரும் தாள மற்ற பாட்டாக இருக்கிறது. அந்த உணர்ச்சிகளுக்குத் தாள லயமும், தாளத்திற்கு அளவும் வழங்குகிறது பாடல் தாளம் கெட்டால் பாவ லயமும் கெடுகிறது. பாவ லயத்திற்குச் சந்தங்களின் மாத்திரைகளே - அதாவது சீர்களின் அளவே பிரதானம் - செப்டம்பர் 1955
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/186
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை