இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
191 தியாகச் சுடர்! பாணன் சிந்தை குலைந்து திகைத்தழுத உன்னுருவைச் சந்தையிலே விற்றார், சகாயமாய்-வந்தபனம் வட்டிக்கு விட்டு வருமானம் பெற்றுநிதம் மொட்டை யடித்தார் முதல்!! நாளும் அழுதழுது நைந்தவுனை முன்னேற்ற தாளும் எழுத்தும் சதமென்றார்-'ஆளும் உலகென்றார், ஊ என்றார்; அன்னார் உனது தலையெழுத்தை மாற்றா தவர்! மண்ணில் உருண்டழுது மாரடித்தார்; நீ அழுத கண்ணிஇஃ தென்று கடலலையை-எண்ணியிவர், பேசினார் நல்ல பெயரெடுத்தார்; உன்பெயரை ஏசினார் இன்னும் பலர்! கதவற்ற வீடாகக் காட்சி தரக்கண்டார், 'விதவையென் றார் இருண்ட வீடென்றார்-கதறினார் ஏற்றும் சுடரை இவரணைத்தார் அல்லாது காற்றின் கரமன்று காண் குங்குமமும் சவ்வாதும், கொத்து மலர்க்குழலும் 'தங்கத் தமிழும் தனமாச்சு-மங்களமாய் வாழ்கின்றார் உன்னுருவ வணக்கம் நடத்தியவர்; வாழ்கஉன் தியாகச் சுடர்! - ஜனவரி 1955