19 கலைகள் ஆதரிப்பாரின்றிக் கிடக்கும் நிலை இளங்கோவுக்குத் தெரிந்தது. நகர் முழுதும் சுற்றிப் பார்க்கவே அவருக்கு நேரமில்லை. - கண்ணகியும் இளங்கோவும் கடை வீதி வழியே வந்து கொண்டிருந்தனர். அதோ ஒரு தமிழச்சி: எச்சிலையிலிருக்கும் சோற்றை வழித்துப் புசிக்கிறாள். அவளருகே ஒரு தமிழ் நா'யும் இருக்கிறது; வற்றிப் போன அவள் மார்புச் சக்கையைச் சுவைத்தவாறு ஒரு தமிழ்ச் சிசு!" கண்ணகி பதறினாள்; இளங்கோ கண்களை மூடிக்கொண்டார். சாலையோரத்தில் ஒரு பெரிய திடலில் ஒரே கூட்டம். இருவரும் அங்கே சென்று பார்த்தனர். யாரோ ஒரு மனிதர் மேடை மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருந்தார் - ஆகா, என்ன அழகான தமிழ் விருந்து! பேசுபவர் அசல் தமிழர்! 'என் மகன் முதுகிலே காயம் பட்டுக் கிடப்பானாயின் அவனுக்குப் பாலூட்டிய தனங்களை அறுத்தெறிகிறேன்' என்று சூளுரை செய்த தமிழச்சியின் மரபில் வந்த தமிழர்கள் நாம்! சிலப்பதிகாரமும், திருக்குறளும் படைத்த நமது தமிழ் மக்கள் மூடர்களல்ல; நம் நாடு நமக்கு வேண்டும்.....! அவர் பேசிக் கொண்டிருந்தார். தமிழரின் உயர்வும், நாகரிகமும், இலக்கிய நயங்களின் மேன்மையும் அவர் சொற் பிரவாகத்தினுடே அடிபட்டுச் சிதறின. கண்ணகியின் உள்ளம் கனிந்து நிறைந்து விம்மிற்று; இளங்கோவுக்கும் பெரும் நிம்மதி. 'தமிழ் செத்துவிடவில்லை; கண்ணகியையும், வள்ளுவனையும் மறந்துவிடவில்லை. நாரதன் எங்கேயோ சென்று எதையோ பார்த்து விட்டுக் கதை அளந்து விட்டான்' என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். கூட்டம் முடிந்தது! கண்ணகியும், இளங்கோவும் கூட்டத்தில. பேசிய அந்தப் பெரிய மனிதரின் அருகே சென்றனர். 'யாரய்யா, என்ன வேண்டும்?' என்று அலட்சியமாகக் கேட்டார் அவர். 'ஐயா, நான் ஒரு தமிழ்ப் புலவன். யாத்திரைக்குப் புறப்பட்டு வந்திருக்கிறேன். இவள் என் சகோதரி. இன்றிரவு தங்குவதற்குச் சிறிதே இட வசதி வேண்டும்' என்றார் இளங்கோ.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை