20 பெரிய மனிதர் கண்ணகியை ஏற இறங்கப் பார்த்தார். 'ஒன் பேர் என்னாம்மா?” கண்ணகி!' அட, நல்ல தமிழ்ப் பெயராயிருக்கே?' தமிழர்களுக்குத் தமிழ்ப் பெயர் இருப்பதில் என்ன ஆச்சரியம்?' என்றாள் அவள். 'பரவாயில்லே...நல்லாப் பேசுறியே!' என்று பல்லைக் காட்டினார் அவர். பிறகு, "ஓ! அதற்கென்ன, தாராளமாக எங்கள் வீட்டில் தங்கலாமே! இந்த உதவிகூடச் செய்யாவிட்டால் ...ஹி..ஹி....!” என்று குழைந்தார். இளங்கோவும், கண்ணகியும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிய மனிதர் மேலும் தொடர்ந்தார். நான் உள்ளுர் முனிசிபல் கெளன்சிலர். சுதர்சனம் பிள்ளைன்னா தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்... ஹிஹி....!” என்று 'சுய அறிமுகம் செய்து கொண்டார். அவர் சொன்ன வார்த்தைகளில் சில இருவருக்கும் புரியவில்லை! இரவு மணி பத்து. சுதர்சனம் பிள்ளையின் பங்களாவின் மேல் மாடியில் கண்ணகி தங்குவதற்கு இட வசதி அளிக்கப்பட்டது. நல்ல நிலா! 'இந்த நேரத்தில் வைகை நதி தீரத்திற்குச் சென்றால்? இந்த எண்ணம் தோன்றியதும் அடிகளாருக்குக் காலையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து பீதியை அளித்தது. ஆனாலும் தனிமையில் சென்றால் ஒன்றும் ஏற்படாது என்று நினைத்தார்; சென்றார். போகும் வழியில் ஒரு சிறிய சந்து! அவருக்கென்ன, மடியிலும் கனமில்லை; வழியிலும் பயமில்லை.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை