22 'ஐயா, ஐயா...' அடிகளார் கதவைத் தட்டினார்; திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக உள்ளே யிருந்து இடி இடித்தாற்போல் பெரும் சிரிப்பொலி கேட்டது. புதிய சிரிப்பல்ல; பழைய சிரிப்பு! ஆம், மதுரை நகரைக் கருக வைத்தபோது வெறி கொண்டு நகைத்த கண்ணகியின் அதே சிரிப்பு! அமைதியான அந்த இருளில் கண்ணகியின் கோரச் சிரிப்பு ஹாலங்கார மிட்டது: இளங்கோவடிகளார் கதவை இடித்தார்; முட்டினார்; மோதினார்-கதவு திறந்தது! அங்கே..... ரத்தக் கறை படிந்த கைகளுடன், கூந்தல் அலைய, விழிகள் பிதுங்க வெறி பிடித்துச் சிரித்து நின்றாள் கண்ணகி! அவள் காலடியில் கண்கள் பிதுங்க ரத்த வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தார் அவளுக்கு இடமளித்த தமிழ் வள்ளல். ‘'தேவி!' அவருக்கு அவள் பதில் சொல்லவில்லை. சிரித்தாள்; மேலும் மேலும் சிரித்தாள். அடிகளார் தேவியாரை அழைத்துக் கொண்டு ஓடினார். 冷 * శి *్య• வைகை நதி தீரம்! கன்னங்கணிந்த இருள். அடிகளார் தேம்பித் தேம்பி அழுகிறார். 'நாரதரே! என்னை மன்னித்து விடும்; நீர் சொன்னது உண்மை! தமிழ் நிலத்தின் சீர்கேட்டை நேரில் பார்த்தேன்-என் கண்களை மறைத்திருந்த மாய வலையை நீக்கி நேரில் பார்த்தேன் - நீர் சொன்னது உண்மை; என்னை மன்னித் தருளும்' என்று கதறினார் புலம்பினார். 'அடிகளாரே, நீர் குற்றமற்றவர். பழைய உண்மையை நீர் கூறினர்; புதிய உண்மையை நான் கூறினேன். பழையன கழியுமாம்; புதியன புகுமாம் - தமிழ்நாட்டில் இன்று புதுமை புகுந்திருக்கிறது. நாளை இதுவும் பழமை யாகிவிடும். லாரும் போவோம்!' என்றார் நாரதர்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை