பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அடிகளாரின் கால்கள் சொர்க்க பூமியை நோக்கி நடந்தன. ஆனால் அவர் மனமோ, நரகத்தில் கிடந்து நைந்து உழன்றது. கண்ணகி, நின்ற இடத்திலேயே நிற்கிறாள். அவள் கண்களில் கண்ணிர்! அல்ல, உதிரமே வழிகிறது! ‘'தேவியாரே, வாருங்கள் போவோம்!' என்று அவளையும் அழைக்கிறார் நாரதர். சூன்ய வெளியில் நிலைத்த அவள் பார்வை திரும்பவில்லை. உயிரற்ற பிணம்போல் நிற்கும் அவள் வாயிலிருந்து பின்வரும் வார்த்தைகள் உதிர்கின்றன. 'நாரதரே, நான் தேவ மகள் அல்ல, தமிழ் பெற்ற புதல்வி - தமிழச்சி! இங்கே ஆயிரமாயிரம் தமிழச்சிகள் விபசாரிகளாக வாழும்போது நான் மட்டும் தேவ லோகத்தின் கற்புக்கரசி என்று பெயர் பண்ணிக்கொண்டு வாழ முடியாது - நீர் போய் வாரும்! - என் வேலை முடிந்து விடவில்லை; இன்னும் இருக்கிறது. என் கற்புத்தி இந்தத் தமிழ் நாட்டை எரிக்கட்டும்; இல்லாவிட்டால் இங்கு புழுத்து நெளியும் விபசாரக் கிருமிகள் என்னையும் அரிக்கட்டும்!' என்று கூறிவிட்டு நகரத்தை நோக்கி நடந்தாள் கண்ணகி, ஐயா தமிழரே! “எங்கே அந்தக் கண்ணகி?" என்று கேட்கிறீரா? அதோ பஸ் ஸ்டாண்டுக்கருகில், சினிமா கொட்டகையில், கோயில் வாயிலில் நின்று உங்களைச் சைகை காட்டி அழைக்கிறாளே, அவள்தான் கண்ணகி! - தமிழ் பெற்ற புதல்வி - தமிழச்சி! - செப்டம்பர் 1955