பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதுரன் மகன் விதுரன் பி. எஸ். ராமையா சிவஞானம் பிள்ளைக்குக் கோழைத்தனத்தைக் கண்டாலே கோபம் வரும். பயந்தாங்கொள்ளித்தனத்தினால்தான் மனிதனுக்குக் கஷ்ட மெல்லாம்' என்பது அவருடைய கைவாண மாக இருந்த கருத்து அவருடைய மகன் திருநாவுக்கரசு எட்டு வயதுப் பையனாக இருந்தபோது, ஒரு நாள் பள்ளிக் கூடத்திலே இன்னொரு பையனுடன் சண்டை போட்டு உதை வாங்கிக்கொண்டு வந்ததற்காக, 'இனிமே உதை வாங்கிக் கொண்டு வருவையா, இனிமே உதை வாங்கிக் கொண்ட வருவையா?' என்று அவரும் அவனை நன்றாக உதைத்து விட்டார். அவருக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் பிறரிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சுவது. 'அவனவன் சோத்துக்கு அவனவன் உழைத்துத் தான் ஆகணும். உழைக்க விரும்பாதவன்தான் பிறரிடம் பல்லைக் காட்டுவான். அந்த மாதிரி ஆட்களை உதைத்துக் காட்டுக்குத் துரத்தி விட வேண்டும்!' என்பார் அவர். இந்தக் கொள்கைகளின் காரணமாக அவர் ஊரில் யாருக்கும் ஆகாதவராகிவிட்டார். 'அது சுத்த முரடு ஐயா, வளைந்து கொடுக்கத் தெரியாத மனிதர்' என்றும், வரட்டு ராங்கிக்காரர் விதுரன் மாதிரி பிறர் கைக்குக் கீழே தன் கை இருக்கக் கூடாதென்று பகவானிடம் வரம் வாங்கி வந்து விட்டதாக நினைப்பு' என்றும் அவரைப்பற்றி ஊரில் அபிப்பிராயங்கள் ஊன்றிப் போயிருந்தன தம்முடைய கொள்கைகளைத் தமது மகன் திருநாவின் மனத்திலும் அவர் குளவிபோல் கொட்டிக் கொட்டிப் பதிய வைத்திருந்தார். அதன் பலனை அவர் இறந்த பிறகு அவருடைய மகள் திலகவதியும், மகன் திருநாவுக்கரசும் அனுபவித்தார்கள். பதினெட்டு வயதடைந்தும் திலகம் மணமாகாமல் நின்றாள். பதினோராவது வயதையடைந்தும் திருநாவு பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வகை யில்லாமல் நின்றான் பிள்ளை உயிரோடிருந்த போது அவருடைய சுபாவத்துக்குப் பயந்தே யாரும் திலகத்தை மணக்க முன்வரவில்லை அவர்