26 2 மனப்பேச்சு நடந்து கொண்டிருந்தபோது தன் தம்பியிடம் 'இனிமே நம்ம கஷ்ட மெல்லாம் தீர்ந்து போகும், திருநாவு! நீ பட்டணத்துக்கு வந்து பள்ளிக்கூடத்திலே படிக்கலாம்!' என்றாள் திலகம். திருநாவு, 'நம் மகிட்ட அதுக்குப் பணமில்லே, நான் பெரியவனாகிச் சம்பாதிக்கத் தொடங்கின பிறகுதான் நம்ம கஷ்டம் தீரும்னு சொன்னியே, அக்கா!' என்றான் ஒன்றும் புரியாமல், 'எனக்குக் கலியாணமாகப் போகுது, என்னைக் கட்டிக்கப் போறவர் உன்னைப் படிக்க வச்சுப் பெரியவனாக்கி விட்டுடுவார்!' என்றாள் திலகம். 'அப்படின்னா அவர் நமக்கு உதவி செய்யப் போறார். பிறித்தியார்கிட்ட உதவி கேக்கறவன் உதவாக்கரைன்னு அப்பா சொல்லிருக்காரே!' என்றான் திருநாவு. அவனுக்கு அதை எப்படி விளக்கிச் சொல்லுவது என்று புரியாமல் திணறினாள் திலகம். 'அவர் நமக்குச் சும்மா உதவி செய்யப் போறதில்லே தம்பி, நம்ம ரெண்டு பேருக்கும் அவர் மாமன் உறவாகப் போகிறார். நமக்குத்தான் அப்பா இல்லையே, அவர் அப்பா இடத்திலே யிருந்து நமக்கு வேண்டியதைச் செய்வார். அவர் வீடே நம்ம வீடாயிடும்' என்றாள். அவ்வளவுதான்; திருநாவுக்கரசின் குஞ்சுக் கற்பனையிலே கதிரேசன் கதைகளில் வரும் வீர ராஜ குமாரனாகி விட்டான். முதல் தடவை அவர்கள் இருவரும் சந்தித்தபோது அவன் கதிரேசனை அந்த வியப்புடன் பார்த்தான். தன் நெஞ்சில் மாமனுக்கு ராஜ குமாரனுக்குரிய சிம்மாசனத்தையும் போட்டுக் கொடுத்து விட்டான்! திலகத்திடம், 'அக்கா, நானும் பெரியவனானவொடனே மாமா மாதிரி ஆயிடுவேன் நம்ம மாதிரிக் கஷ்டப்படற அக்கா, தம்பி இருக் காங்களான்னு தேடிப் பார்த்து அவங்களுக்கு மாமனாயிடுவேன்' என்றான் திருநாவு. திலகத்துக்கு ரொம்பத் திருப்தியாகிவிட்டது, அவன் தன் கணவரிடம் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் இருவருக்கும் மனப்போக்கு ஒட்ட வேண்டுமே என்று அவள் ரொம்பக்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை