27 கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆகையால் உற்சாகத்துடன், 'ஆமாம் தம்பி, ஆண் பிள்ளையாப் பிறந்த ஒவ்வொருத்தரும் ஒரு பெண்ணைக் காப்பாத்த வேண்டியிருக்கும். அதைச்சரியா நிறை வேத்தாதவனை உலகம் மதிக்காது' என்றாள்., 3 மணத்தின்போதும் அதன் பிறகும் திருநாவு, கதிரேசனிடம் ஒரு ராஜகுமாரனுக்குரிய மரியாதை காட்டிப் பழகினான் கதிரேசனுக்கு அது கொஞ்சம் விசித்திரமான உறவாகப்பட்டாலும், அவன் கிராமத் தாரிடமிருந்து திருநாவைப்பற்றி விவரமாகத் தெரிந்து கொண் டிருந்தானாகையால் மிகமிகப் பக்குவமாக நடந்து, அவன் மனத்தை வசப்படுத்திக் கொண்டு விட்டான். கதிரேசனுக்குச் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை. மணம் முடிந்தவுடன் திலகத்தையும் திருநாவையும் உடனழைத்துக் கொண்டு அவன் சென்னைக்குப் புறப்பட்டான். ரயில், திருச்சிக் கூடுவாயை நெருங்குவதற்கு முன்னாலேயே ஒரு பலகையின்மேல் படுக்கையை விரித்துத் திலகம் படுக்க வசதி செய்து கொடுத்துவிட்டு, கீழே தளப் பலகையின் மேல் விரிப்பைப் போட்டு அதில் திருநாவைப் படுக்க வைத்தான் கதிரேசன். வண்டி திருச்சியில் வந்து நின்றது. கூட்டம் திமு திமு'வென்று ஏறியது. பார்வைக்கே பரம முரடனாகத் தோன்றிய ஒருவன் மனைவியையும் கைக்குழந்தையையும் உடன் அழைத்துக் கொண்டு, கதிரேசன் முதலியவர்கள் இருந்த பகுதிக்கு வந்தான். நேரே திலகம் படுத்திருந்த பலகையருகில் போய் நின்று, 'இந்தாம்மா, எழுந்திரிச்சி இவளுக்கு இடம் கொடு!" என்று அதட்டினான். திருநாவு சுருட்டி மடக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். கதிரேசன், 'நாங்க மெட்ராஸ் வரையிலே போகணும். பின்னாலே இடமிருக்கும்-போய்ப் பாருங்களேன்!' என்றான். வந்தவன், 'வேணும்னா நீ போய்ப் பாரு! - ஊம், எழுந்திரம்மா' என்று பலகையிலிருந்து தொங்கிய ஜமுக்காளத்தைப் பற்றி இழுத்தான் கதிரேசன் கோபத்துடன் எழுந்து, இடம் வேணும்னா வாய் வார்த்தையாச் சொல்லு ஐயா, பொம்பளை படுத்திருக்கிற படுக்கை யைத் தொட்டு இழுக்கிறியே?' என்றான்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை