28 வந்தவன், 'இழுத்தா என்ன செய்திடுவே? - உம், எழுந்திரம்மா!' என்று இன்னும் பலமாக இழுத்தான். நல்ல வேளை, திலகம் கீழே விழவில்லை. சாமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து படுக்கையையும் சுருட்டி இழுத்துக் கொண்டாள். வந்தவன் தன் மனைவியை நோக்கி, 'ஏய், அப்படி ஒக்காரு!' என்று அதட்டி உட்கார வைத்து விட்டுத் தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அப்போதுதான் காலடியில் கிடந்த விரிப்பை அவன் கவனித்தான். உடனே, 'இதென்னடா இது, கால்மாட்டிலே சங்கடம்? டேய், தள்ளிப்போடா அப்பாலே!' என்று திருநாவை அதட்டி விரிப்பைக் காலால் உதைத்தான். ஆரம்பத்திலிருந்தே அவனுடைய ஆர்ப்பாட்டங்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திருநாவு கதிரேசனைப் பார்த்தான். அந்த மனிதனைத் தன் மாமன் தக்கபடி தண்டித்துப் புத்தி கற்பிப்பார் என்று அவன் எதிர்ப்பார்த்தான். கதிரேசன் நிதானமாக, 'ஏனய்யா, படுக்கையை உதைக்கிறே? உனக்குத்தான் இடம் கிடைச்சாச்சே' என்றான். வந்தவன், 'இப்போ அவன் காலடியிலேயிருந்து எழுந்திருக்க லேன்னா, அப்படியே படுக்கையோடே தூக்கி அப்பாலே எறிஞ்சிடு வேன்!" என்று எழுந்தான். இதைக் கேட்டவுடன் திருநாவு துடிதுடித்து எழுந்து விட்டான். சண்டைக் கடா போலத் தலையைச் சாய்த்துக் கொண்டு, 'ஆண்பிள்ளையாயிருந்தா எறி பார்க்கலாம்?' என்று வந்தான். கதிரேசன் சட்டென்று அவனைக் கையால் தடுத்து, 'மரியாதை தெரியாதவங்ககிட்ட நீ ஏன் பேசறே திருநாவு? போ. அப்படி அக்கா கிட்டப் போய் உட்காரு' என்றான். வந்தவன், 'ஏய், நாக்கை அடக்கிப் பேசு யாரய்யா மரியாதை கெட்டவன்?' என்று முண்டாசைக் கட்டிக்கொண்டு எழுந்துவிட்டான் அந்தக் கணத்தில்தான் திருநாவின் மதிப்பில் கதிரேசன் பயந்தாங்கொள்ளியாகிவிட்டான். அந்த முரடனை நன்றாக உதைத்து மாமன் வெளியே இழுத்து விடப் போகிறார் என்று எதிர்பார்த்த திருநாவு ஏமாற்றம் அடைந்தான்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை