பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அதற்குக் காரணம் அங்கிருந்த ஒரு பெரியவர் குறுக்கிட்டு, 'என்னய்யா, நீங்க ரெண்டு பேரும் கொஞ்சநேரப் பிரயாணத்துக்காக ஜன்ம விரோதிங்க மாதிரிக் கெளம்பிட்டீங்களே?- உக்காருங்க லார் பேசாமே! நீங்களும் உக்காருங்க!' என்று இருவரையும் அடக்கி விட்டதுதான். - வந்தவன். 'நீ எனக்கு ஒரு துரும்பு. இவர் தடுத்திரா விட்டால் எலும்பை நொறுக்கி யிருப்பேன்' என்ற பார்வையுடன் கதிரேசனைப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான். கதிரேசன், திலகத்தைப் பார்த்தான். அவள் கண்களிலிருந்த கவலையையும், கெஞ்சலையும் கண்டவுடன் அவன் நெஞ்சில் எழுந்த கோபப் படபடப்பு சட்டென்று அடங்கியது. ஆயுள் முழுவதும் உடனிருந்து வாழப் போகிறவள் தன்னை ஒரு முரடனாகக் கருதிவிடக் கூடாதே என்ற எண்ணம் அவன் மனத்தில் எழுந்தது. திருநாவிடம், 'போய் அக்கா பக்கத்திலே உட்காரு' என்று சொல்லிவிட்டுத் தன் இடத்தில் மெளனமாக உட்கார்ந்துவிட்டான். திருநாவின் நெஞ்சில் ஏதோ படக்கென்று ஒடிந்ததுபோல இருந்தது. தன்னையும் அக்காவையும் ஆதரிக்க வந்த ராஜ குமாரன் சுத்தக் கோழை என்ற எண்ணம் தோன்றி அவனை வதைத்தது. சாடையாக அந்த முரடனைப் பார்த்தான். அவன் வாட்ட சாட்டமாக ஐந்தரையடிச் கருங்காலிக்கட்டை மாதிரி உட்கார்ந்திருந் தான். 'சந்தேகமேயில்லை, மாமா அவனைக் கண்டு பயந்து போய் விட்டார்' என்று நிச்சயம் செய்துவிட்டான். இதனால் அவன் மதிப்பில் கதிரேசன் தலை குப்புற விழுந்து விட்டான் என்பதைப் பற்றி மற்ற இருவரும் சந்தேகிக்கக் கூட இல்லையென்றாலும், எழும்பூரில் ரயிலைவிட்டுக் கீழே இறங்கியதி லிருந்து அவன் கதிரேசனிடம் சேர்ந்து பழகாமல் ஒதுங்கினாற் போலப் பழகுவதைக் கண்டு காரணம் புரியாமல் திகைத்தார்கள் 4. சென்னை சேர்ந்த மூன்றாவது நாளே கதிரேசன் திருநாவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வைத்தான் அவனுடைய பள்ளிக்கூட அனுபவத்தைப் பற்றித் திலகம் கேட்டதற்குத் திருநாவு சலிப்புடன் பதில் சொன்னான் வீட்டிலும் அவன் எதிரிலும் திருப்தியில்லாதது