31 திலகம் இடிந்து போய் உட்கார்ந்துவிட்டாள். 'அட தெய்வமே, நான் முன் பிறவிகளில் என்ன பாவம் செய்தேனோ, தெரிய வில்லையே?’ என்று எண்ணி எண்ணிக் கண்ணிர் பெருக்கினாள். மணி ஒன்பதும் ஆகிவிட்டது. திருநாவும் கதிரேசனும் திரும்பி வந்து சேரவில்லை. திடீரென்று மாடி முன் புறத்தாழ்வாரத்தில் எழுந்த கூச்சல் அவள் சிந்தனையோட்டத்தைக் குலைத்தது; திடுக்கிட்டு எழுந்து தாழ்வாரத் திற்கு ஓடினாள். அந்த வீட்டு மாடியில் இடப்புறப்பகுதியில் அவர்கள் குடியிருந் தார்கள். வலப்புறத்தில் அச்சாபீஸ் மங்கபதி நாயுடுவின் குடும்பம் இருந்தது. திலகம், தாழ்வாரத்தை யடைந்தபோது நாயுடுவின் மனைவி சுகந்தா தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒன்றரை வயதுக் குழந்தை அவள் இடுப்பிலிருந்த படி வீட்டு முகடு அதிர அலறிக் கொண்டிருந்தது. மாடிப் படித் தலைப்பில், அருகிலிருந்த மார்க்கெட்டில் கறிகாய்க்கடை வைத்திருந்த மாணிக்கம் வெறி பிடித்தவன் போல நின்று கொண்டிருந்தான் அவன் முகத்திலும் தலையிலும் அன்னாபிஷேகம் நடந்தது போலச் சோறு கொட்டிக் கிடந்தது. அவன் பின்னால் படிகளின் மேல் திருநாவும் வீட்டின் கீழ்த் தளத்தில் குடியிருந்த சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். சுகந்தா, 'மானங்கெட்டவன்! பிள்ளையைத் தொட்டு அடிச்ச கையை ஒடிச்சுப் போடணும் து, நீயும் ஒரு ஆண்பிள்ளையா?' என்று கத்தினாள். மாணிக்கம், 'ஏய், இனிமே ஏதாவது பேசினே- பொம்பளேன்னு கூடப் பார்க்க மாட்டேன்' என்று உறுமினான். சுகந்தா, 'என்ன செய்திடுவே? சோமாறி வா. வந்து தொட்டுப் பாரு' என்று முன்னிலும் பலமாகக் கூவினாள். மாணிக்கம் படிக்கட்டுத் தலைப்பிலிருந்து அவளை நோக்கி நகர்ந்தான். திலகம் ஒரே எட்டில் சுகந்தாவிடம் போய் அவளைப் பிடித்துக் கொண்டு, 'நீங்க பேசாம உள்ளே வாங்க, அக்கா!' என்று இழுத்தாள்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை