33 அதைக் கண்டு திலகம் பயத்தால், 'ஐயோ!' என்று அலறி விட்டாள். சுகந்தா கோவெனக் கதறி அழத் தொடங்கி விட்டாள். கதிரேசனால் பொறுக்க முடியவில்லை. 'சீ, நீயும் ஒரு ஆண் பிள்ளையா?' என்று மாணிக்கத்தின் கன்னத்தில் பளிர் என்று ஒன்று வைத்தான். மறுகணம் படபடவென்ற சத்தம் வந்ததைத் தான் கேட்டாள் திலகம். யார், யாரை அடித்தது என்பதைக் காண விரும்பாமல் கைகளால் முகத்தை வேறு மூடிக் கொண்டு விட்டாள்! சண்டை இரண்டே நிமிஷத்தில் முடிந்துவிட்டது. கதிரேசன் மாணிக்கத்தைக் கீழே தள்ளி அவன் மார்பின்மேல் இடது முழங்காலை ஊன்றி உட்கார்ந்து அவன் கைகளை முறுக்கிப்பற்றிக் கொண்டு, 'இனிமே பொம்பளையைத் தொட்டு அடிப்பியா?' என்று அவன் முகத்தில் ஓங்கிக் குத்தினான். மாணிக்கம், 'விடு ஸார் அட, இரு ஸார்!" என்று கெஞ்சினான். கதிரேசன் அவன் கைகளை விட்டுவிட்டு எழுந்து நின்று, 'உம், ஒடிப்போ இந்தப் பேட்டையிலே அப்பாத்தனம் காட்றதை யெல்லாம் இங்கே வச்சுக்காதே, ஜாக்கிரதை' என்றான். மாணிக்கம் அவசரம் அவசரமாக எழுந்து ஏதோ முனு முணுத்துக் கொண்டே படியிறங்கிப் போய்விட்டான். கதிரேசன் சுகந்தாவிடம், 'அவன் பொறுக்கிப் பயன்னு தெரிஞ்சிருந்தும் நீங்க அவங்கிட்ட வாய் கொடுக்கலாமா, அம்மா? பிள்ளையைக் கவனிக்காம விட்டுட்டு, அவனோடே வாதாடிக்கிட்டு நிக்கிறீங்களே? - நீ வா திலகம், உள்ளே!' என்று மனைவியை அழைத்துக் கொண்டு போனான். 5 அவர்களுக்குப் பின்னால் அறைக்குள் வந்த திருநாவு விம்மியதைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அவன் முகம் மூச்சுத் திணறுவது போல விகாரமடைந்ததைக் கண்டு திலகம் பதறிப்போய், 'என்ன திருநாவு, முகமெல்லாம் என்னவோபோல இருக்கே?' என்று விசாரித்தாள். திருநாவின் குரல் அடைத்துக் கொண்டது. 'ஆண் பிள்ளை அழக் கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்கார், அதுதான்' என்றான். கதிரேசன் அவனைப் பிடித்திழுத்து அணைத்துக்கொண்டு, 'வெளி யாட்களுக்கு எதிரிலே தான் அழக்கூடாது. நம்ம வீட்டுக்குள்ளே அழுதுக்கலாம், திருநாவு' என்றான் 3 – (gس صا
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை