பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவமலர்! எம்.எல். சபரிராஜன் பொசலிலிருந்த ராமு வேகமாக உள்ளே ஓடினான். 'அம்மா! அம்மா!' என்றான். பதில் இல்லை. பருவதத்தம்மை அடுப்பங்கரையில் மும்முரமாயிருந்தாள். சும்மா இருந்திருந்தால்தான் என்ன? மகன் கூப்பிட்டவுடனே, 'ஏண்டா, கண்ணு!' என்று அன்புடன் கேட்டிருக்கவா போகிறாள்? - எப்போதும் ஒரே மாதிரியான சிடுமூஞ்சிக் குணம் அவளுக்கு. ஆனால் அதற்கு அவளைக் காரணமாக எப்படிச் சொல்ல முடியும்? 'அம்மா! அம்மா!' என்றான் ராமு மறுபடியும். பதிலே இல்லை. ஆனால் சிறுவன் விடவில்லை. 'அப்பா வர்றாரு, அம்மா!' என்றான் அவன் மகிழ்ச்சியுடன். 'சரிதாண்டா, யானை மேலே வர்றாரா? குதிரை மேலே வர்றாரா?' என்று எரிந்து விழுந்தாள் பருவதம். சுவரிலிருந்து மீண்ட பந்தைப்போல வாசலுக்குத் திரும்பினான் சிறுவன். ஆனால் மனசுக்குள்ளாக மாத்திரம் அவனுக்குச் சந்தோஷம் பொங்கிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளாய் அவன் கேட்ட ரப்பர் பொம்மையை இன்று வாங்கிக் கொண்டு வருவதாய்ச் சொல்லிவிட்டுப் போனார் அப்பா. இப்போது நிச்சயம் வாங்கி வருவார். அதை வைத்துக்கொண்டு எவ்வளவு நன்றாய் விளையாடலாம்! எவ்வளவு நாளாக அவன் ஆசைப்பட்ட பொருள் அது! சுண்டிப்போன முகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் ராமசாமிப் பிள்ளை. 'அப்பா! பொம்மைதானே அப்பா, அது?’’ என்றான் ராமு, அவர் கையிலிருந்த ஒரு பொட்டலத்தைப் பார்த்துவிட்டு. 'இல்லேடா, பணம் கிடைக்க வில்லை; நாளை வாங்கி யாறேன்' என்று சலிப்புடன் கூறியபடி, பொட்டலத்தைக் கீழே விட்டெறிந்தார். தையற் கடையில் ஒட்டுப்போட்டுத்