37 'அமிர்தம் என்றால் என்ன அப்பா?' என்று கேட்டான் பையன். 'அதுவா? - கிடைப்பதற்கு அரிய ஒரு பொருள். குடிப்பதற்கு அது ரொம்ப நன்றாயிருக்கும்' என்றார் பிள்ளை. 'காப்பியைப் போல இருக்குமா?' என்றான் சிறுவன். பிள்ளை திகைத்துப் போனார். அன்றிருந்து அவர் பையனுடைய பாடப் புத்தகத் துக்குப் பக்கத்தில் கூடப் போவதில்லை! - இப்படிச் சிக்கனமாக இருந்ததால் தான் அவர் கடன் படாமல் ஓரளவு மானமாய் வாழ முடிந்தது. இதுவரை ஒரு கடன்காரனாவது பணத்துக்காக அவர் வீட்டு வாசலில் வந்து நின்றதில்லை. எப்போதாவது ஐந்து - பத்து திட்டத்துக்கு மேல் போய்விட்டால், கடையில் வாங்கிக் கொள்வார். அப்புறம் மாதம் முடிந்து சம்பளம் வாங்கும்போது கொடுத்து விடுவார். இவ்விதமாகவே சென்ற பதினைந்து வருஷமும் நடந்து வந்தது. இப்படியே ஆயுசு முழுவதையுங்கூடக் கழித்திருப்பார். ஆனால், சென்ற மாதம் எதிர்பாராத விதமாக அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஏறக்குறைய, பதினைந்து நாட்கள் வரை படுத்த படுக்கையாய்க் கிடந்தார். இருமலும் சளியும் காய்ச்சலும் அதிகமாயிருந்தது. சரியாய்ப் போகுமென்று தான் முதலில் நினைத்தார். நாட்டு மருந்து சாப்பிட்டார். ஆனால், நோய் குணமாக வில்லை. டாக்டரிடம் போக வேண்டியதாய் விட்டது. டாக்டர் மருந்து கொடுத்தார்; ஊசி போட்டார். ‘டானிக்'கும் அவரே கொடுத்து அன்புடன் சாப்பிடச் சொன்னார். நோய் ஒரு வகையாய்க் குணமாயிற்று. ஆனால், செலவு மொத்தம் முப்பது ரூபாய்க்குமேல் ஓடிவிட்டது. 'அடடா இப்படியாகுமென்று தெரிந்திருந்தால், டாக்டரிடம் அகப்பட்டுக் கொள்வதற்குப் பதிலாக எமனிடமே அகப்பட்டுக் கொண்டிருந்திருப்பேனே!' என்று வருத்தப் பட்டார். ஆயினும் என்ன செய்வது? கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? சம்பளம் வாங்கியதும் முதலாவது டாக்டருக்குக் கொடுத்துத் தீர்த்துவிட்டு, இனிமேல் அவரிருக்கும் பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை யென்று விரதம் செய்து கொண்டார் - ஒரு பெருந் தொகை இப்படி எதிர்பாராத விதமாகச் செலவாகி விட்டதால், மற்றச் செலவுகளுக்குப் பணம் இல்லாமல் அவர் திண்டாடும்படி யாகிவிட்டது. முக்கியமாக, வீட்டு வாடகையை உடனே
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை