'ஆடி வரும் தேனே' பூவை எஸ். ஆறுமுகம் கடிகாரம் சொன்னது, 'உச்சிப் பொழுது மணி பன்னி ரெண்டு!” என்று! ஆசிரியர் ராஜேந்திரன் அப்பொழுதுதான் பெருமூச்சு விட்டார். சமீபத்தில் திரையிடப்படவிருந்த புதிய படத்திற்கான பத்திரிகைக் காட்சி ஒன்றுக்குப் போய் விட்டுத் திரும்பி வந்திருந்தார் அவர். 'அப்பாடா, இப்பொழுதாவது முடிந்ததே!' என்ற அவர் பெருமூச்சில் ஆயாசமிருந்தது. பையன் காப்பி கொண்டு வந்தான். பெரு மூச்சுக்குப் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? மிஸ்டர் பூபாலன்!' 3 + "εγυπή!... ஆசிரியரும் துணை ஆசிரியரும் 'கலைஞன்” இதழுக்குரிய பொருளடக்கத்தைப் பற்றிப் பேசினார்கள். 'பூபாலன், இதோ என்னுடைய 'புனையா ஒவியம் தொடர்கதை ரெடி. இந்த அத்தியாயத்தில் ஒவியன் ராமுவுக்கு இருக்கும் பிள்ளைப்பாச வெறியைப் பற்றிய கதை வளர்கிறது; ஆர்டிஸ்டிடம் சொல்லி நல்ல படங்களாகப் போடச் சொல்லுங்கள்...' 'ஆகட்டும், ஸார்!' ஹாலின் திரை விலகியது; அதிசயம் ஏற்றம் புரிந்தது; நெற்றி மேடு ஏறி இறங்கிற்று; கேள்விக் குறியில் ஆச்சரியக் குறி உள்ளடங்கிப் பேசியது. அலுவலகத்தைத் தாண்டி நின்றது காம்பவுண்ட் சுவர். அடுத்து ஒரு தார் தொழிற்சாலை. அதன் பின்புறத்துச் சுவரில் யாரோ ஒருவன் கிறுக்கிக் கொண்டிருந்தான். அந்த மனிதன், சின்னச் சின்னக் குழந்தைகளின் உருவங்களை வெறும்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை