43 ஆயிரக்கணக்கான சித்திரங்களை உயிரோவியங்களாகத் தீட்டு வேன்; ஒவியன் மெளலி என்ற பெயரைச் சிரஞ்சீவியாக்கு வேன்... ஆனால்...இந்தக் குழந்தையாவது எனக்குக் கிடைப்பதாவது!....பாழும் தெய்வம், கொடுத்த கையாலேயே என் ஆறு குழந்தைகளையும் வாங்கிக்கொண்ட அது, இந்த ஒரு குழந்தையையாவது நான் அடைய எனக்கு ஒரு வழி காட்டக் கூடாதா...? மெளலி விம்மினார்; அதன் ஒலி தேய்வதற்குள் சிரித்தார்! கண்ணம்மா மேலும் அலறினாள். ராஜேந்திரன் அடிமேல் அடியெடுத்து வைத்து உள்ளே வந்தார். விடி நிலவின் மங்கிய ஒளியிலே, அறையில் சிதறிக் கிடந்த படங்கள் தெரிந்தன. சுவரில் தொங்க விடப்பட்டிருந்தது ஒர் உயிர்ச்சித்திரம், அதுதான் குழந்தை கண்ணம்மா!-அதில் மெளலியின் கையெழுத்து இருந்தது. ஆசிரியர் சிந்தித்தார்! மிஸ்டர் மெளலி, இப்படி வாருங்கள். உங்களிடம் இந்த ரகசியத்தைச் சொல்லவே இரவு உங்களைப் பூபாலன் மூலம் இங்கே அழைத்து வரச் செய்தேன். இந்தக் குழந்தை கண்ணம்மா உங்களுடைய குழந்தை! அதிசயமாயிருக்கிறதா? உங்கள் மனைவியின் பிரசவத்தின்போது, ஆபரேஷன் செய்து குழந்தையை அப்புறப்படுத்தினார்களல்லவா, அப்போது அவர்களுடைய நிலை ரொம்பவும் கவலைக்கிடமாயிருந்த படியால் யாருமே குழந்தையைப் பற்றிக் கவலைப்படவில்லை, அதன் பேச்சு மூச்சற்ற நிலையைக் கண்டு அது இறந்து விட்ட தென்று நினைத்து, அதை அடக்கம் செய்ய நர்ஸ் ஒருத்தியிடம் அனுப்பி விட்டார்கள். குழந்தை உயிரோடிருப்பதை நர்ஸ் உணர்ந்தாள். அப்போது என் மனைவியும் பிரசவத்தில் குழந்தை யைப் பறிகொடுத்த துயரத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்தாள். அவள் சதா குழந்தையைப் பற்றியே புலம்பி அழுவதைக் கண்ட நர்ஸ் மனமிரங்கி, கடைசி நாளில் உண்மையை ரகசியமாகச் சொல்லிக் குழந்தையையும் தந்தாள்... .... மிஸ்டர் மெளலி, தெய்வம்தான் உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இதுவரை எங்கள் குழந்தையாக
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை