பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 "அதோபார், அவர் உன் மகளை அப்படியே படமாக்கியிருக் கிறார்! - பார்த்தாயல்லவா? அப்படிப் பட்ட மெளலி சுயபுத்தி பெற வேண்டுமே என்று தான் அவரிடம் கண்ணம்மா அவரது புத்திரி என்ற பொய்யை நான் சொன்னேன். அதனால் இப்போது அவருடைய சுய நினைவு திரும்பியிருக்கிறது. 'அதைக் கெடுக்காதே! கண்ணம்மா நம் குழந்தையாக மட்டும் அல்ல; அவர் குழந்தையாகவும் இருக்கட்டும்; கவலை கொள்ளாதே!-கண்ணம்மா தன் குழந்தை அல்ல என்பதை அவர் அறிய நேர்நதால், மறுபடியும் அவருக்குச் சித்த பேதம் ஏற்பட்டுவிடும். அதனால் ரஸிகர் உலகம் ஒர் அருமையான சைத்ரீகரை இழந்துவிடும். அதற்காக மெளலியிடம் கொஞ்சம் கருணை காட்டு, மீனா!' ராஜேந்திரனின் கண்ணிர் மீனாவின் கைகளின் மேல் வழிந்து தெறித்தது. கணவனும் மனைவியும் அமைதி பூத்த நெஞ்சோடு கூடத்துக்கு வந்தார்கள். அங்கு சூன்யம் பரிபாலித்திருந்தது. வர்ணக் கலவைச் சாமான்கள், சித்திரங்கள், துரிகைகள் எல்லாம் மூலைக்கு ஒன்றாகச் சிதறிக் கிடந்தன.

  • >

கண்ணம்மா!....கண்ணம்மா....! 'மெளலி ஸ்ார்!....மிஸ்டர் மெளலி...!' "அத்தான், எங்கே நம் குழந்தை? அந்த ஆர்டிஸ்டைக்கூடக் காணவில்லையே!...அத்தான், உங்கள் விளையாட்டு வினையாகிப் போய்விட்டதே, அத்தான்!” மேஜை மேலிருந்த கடிதம் பேசுகிறது: 'ஆசிரியர் ராஜேந்திரன் அவர்களுக்கு, என் மகள் கண்ணம்மாவை நான் அழைத்துக் கொண்டு போய்விட்டேன். என் கண்ணை என்னிடம் சேர்ப்பித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி.... - மெளலி. ’’