46 பெற்ற மனங்கள் தூண்டில் புழுவாயின. மெளலியைப் பிடிக்க ஏற்பாடுசெய்ய, ராஜேந்திரன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். அதற்குள் குழந்தையும் கையுமாக மெளலி எதிரே வந்தார். 'ஆசிரியர் லார்! தயவு செய்து என்னை மன்னியுங்கள். கூடின.நேரப் புத்தித் தடுமாற்றத்திலே கண்ணம்மாவை நான் அழைத்துச் செல்ல முடிவுகட்டிவிட்டேன். ஐந்து வருஷங்களாக என் கண்மணியை, என் செல்வத்தை வளர்த்த நீங்களும் உங்கள் மனைவியாரும் குழந்தையின் பிரிவை எப்படித் தாங்குவீர்க ளென்பதை அப்போது நான் உணரவில்லை. பிறகு குழந்தை யைக் காணாமல் நீங்கள் எப்படித் துடிப்பீர்களோ என்ற நினைவு வரவே, ஓடோடி வந்தேன். குழந்தைப் பாசம் என்றால் என்ன வென்பதை நான் முழுக்க முழுக்க அறிந்தவனா யிற்றே, எனக்குத் தெரியாதா உங்கள் வேதனை!.... என்னை மன்னியுங்கள்; இனி நானும் என் மகள் கண்ணம்மாவும் உங்கள் அடைக்கலம்!’ என்று சொல்லி விம்மினார் ஒவியர் மெளலி. பலே, பலே! ஒரு அப்பாவுக்கு ரெண்டு அப்பாவாயில்லே எனக்குக் கிடைச்சிருக்குது?...அதோ ஒரு அப்பா, இதோ ஒரு அப்பா!' என்று குதுகலித்தாள் குழந்தை கண்ணம்மா. - ஆகஸ்ட், 1954
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை