'நானும் மனிதன்!” சுந்தர ராமசாமி அன்றும் கக்கையா வரவில்லை. ராமய்யர் கொல்லைப் புறத்தில் நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். அவர் வேண்டிடி நெகிழ்ந்திருந்தது; கைகள் வயிற்றைத் தடவிப் பிசைந்துகொண்டிருந்தன. வீட்டிலுள்ளவர்கள் தன் கூப்பாட்டைக் காது கொடுத்துக் கேட்காமல் தங்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் அவருடைய கோபம் அதிகரித்தது. 'டேய், குஞ்சுமணி!' என்று கூப்பிட்டார்; பதில் இல்லை. அடுக்களையைப் பார்த்தவாறு, தடியன் எங்கேடி தொலைஞ்சிட்டான்?' என்றார். சகதர்மிணி சீதாதேவி திடுக்கிட்டு, 'டேய் குஞ்சுமணி' என்று உச்சஸ்தாயியில் கூப்பிட்டாள். குஞ்சுமணி வந்து சேர்ந்தான். வயதில் சிறுவன்தான். ஆனால் பெயருக்கேற்றபடி "குஞ்சு இல்லை; குண்டு! 'டேய்! இன்னிக்கும் வரல்லியோ, அந்தக் கக்கையா?” 'யாரப்பா?” 'உங்க பாட்டன்! மோறையைப் பாரு, தோட்டிடா தோட்டி!' குஞ்சுமணி பிள்ளையார் மாதிரி நின்று கொண்டிருந்தான். வெளியே போய்ப் பாருடா! அடுத்த தெருவுக்கு யார் வரானோ, அவனைச் சீக்கிரமாக் கூட்டிண்டு வா! - போ, போ!' குஞ்சுமணி ஓடினான்; அவனுக்குக் கிடைத்த தகூடினை'யில் அப்பாவுக்கு எதிரே வராமல் மறைந்து கொணடாள் அம்மா.
- ** جيه **
'உலகமே கெட்டுப்போச்சு!' என்று சொல்லியவாறே, அய்யர் வாசல் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்.