இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை 'மனிதன் இதழ் தொகுப்பு எங்கள் இலக்கிய முயற்சியில் இரண்டாவதாக வெளிவருகிறது. முதல் வெளியீடு 'கசடதபற' இதழ் தொகுப்பு. நாற்பது ஆண்டுகளுக்கு முன் மனிதனில் வெளிவந்த சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், விந்தனின் முற்றுபெறாத நாவல் ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது மனிதன் இதழிலிருந்து பொருக்கு மணிகளை மு.பரமசிவம் திரட்டித் தந்துள்ளார். இலக்கிய ஆர்வலர்கள் இதனை வெகுவாக வரவேற்பார்கள் என நம்புகிறோம். அடுத்து சுபமங்களா, மணிக்கொடி, தீபம், சரஸ்வதி, கணையாழி பத்திரிகைகளின் திரட்டுகளைத் தருவதில் ஈடுபட்டுள்ளோம். வாசகர்களின் ஆதரவு இதுபோன்ற இலக்கிய முயற்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் என எதிர்பார்க்கிறோம் - எம். நந்தன்