48 எதிர்வீட்டு வராந்தாவில் ஒரு தலை முளைத்தது. ""σηJπή...! அய்யர் திரும்பிப் பார்த்தார். 'உங்கள் வீட்டிற்குத் தோட்டி வந்தானா, ஸார்?' என்று கேட்டார் அவர். இப்படிக் கேட்க ஒர் ஆசாமி கிடைத்ததில் அய்யருக்கு அளவிலா ஆனந்தம். "வரலையே? அவனைத்தான் நானும் பார்த்துண்டிருக்கேன். என்ன அநியாயம் பார்த்தேளா, ஸார்? தடியனை ரெண்டு நாளாக்கானோம் - இவனுங்களைச் சொல்லிக் குத்தமில்லை ஸார், முனிசிபாலிட்டி செத்த முனிசிபாலிட்டி! இந்தப் பயல்களை யெல்லாம் ஒடனே ஒடனே தீர்த்துக் கட்டிப்புட வேண்டாமா? - திமிர் பிடிச்சவன்; ஊரைக் கலக்கணும்னே வராம இருப்பான்!' தொடர்ந்து பேசுவதற்கு இடைஞ்சலாகச் சாக்ஷாத் கக்கையாவே அங்கு வந்து விட்டான். நல்ல கட்டுமஸ்தான தேகம்; ஆனால் முகத்தில் மட்டும் சோர்வு. 'டேய், நில்லு! ரெண்டு நாளா ஏன் வரல்லே?" f : . 'ஒடம்பு சரியில்லே சாமி, காய்ச்சலு 'அட பாவமே, அப்படியிருக்கிறப்போ ஏனப்பா இன்னிக்கு வந்தாய்? இன்னும் ஒரு வாரம் ரெஸ்டு எடுத்துக்கப்படாதோ? நாங்க எப்படியாவது திண்டாடிட்டுப் போறோம். நீர் அதற்காகக் கவலைப்படலாமோ?' என்றார் ராமய்யர் எகத்தாளமாக. அய்யரது குரலில் தொனிக்கும் ஹாஸ்யத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மூளை இல்லாமற் போகவில்லை கக்கையாவுக்கு. 'சாமி, எனக்கு நெசமாவே ரெண்டு நாளா நல்ல காய்ச்சலு, சாமி!' என்றான் அவன். அவனைத் தொடர்ந்து பேச விடாமல் அய்யர் குறுக்கிட்டார். காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி... உனக்குத்தான் என்னவெல்லாம் வருகிறது!' § { - * (§ ς 2 * * நானும மனுசனதானே, சாம
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை